கேரளாவில் புதிய JN.1 கொரோனா வைரஸ்.. மிகவும் கவனமாக இருங்க.. மத்திய அரசு எச்சரிக்கை
டெல்லி: கேரளாவில் புதிய JN.1 வகை வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில், மக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும், ஆரோக்கியம் என்பது அரசியல் இல்லை என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுகள் மொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ், கடந்த 2022 பிற்பகுதியில் தான் இயல்பான நிலையை எட்டியது. இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் கடுமையாக சரிந்தது. 100க்குள்தான் கோவிட் 19 தொற்று பரவியது.

இந்நிலையில் கேரளாவில் புதிதாக JN.1 வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மிதமான பாதிப்பினை ஏற்படுத்தும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பு கேரளாவில் வேகமாக அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக அதிகரிக்கும் அபாயமும் இருக்கிறது.
இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கோவிட் 19 பரவலை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி ஆலோசனைகளை அனுப்பி உள்ளது. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதனிடையே கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். அப்போது அதிகாரிகளிடம் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா. மொத்த அரசாங்கமும், சரியான புரிதல் மற்றும் அணுகுமுறையுடன் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரம் இது. கொரோனா விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதேநேரம் நாம் பீதி அடையத் தேவையில்லை.. கண்காணிப்பை அதிகரிக்கும் அதேநேரம் கோவிட் தொடர்பான மக்களுக்கு தேவையான பயனுள்ள விஷயங்களை நாம் அளிக்க வேண்டியதும் முக்கியம்.
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அனைத்து மருத்துவமனைகளிலும் நிலைமையை ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு இந்த விஷயத்தில் முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று நான் உறுதி அளிக்கிறேன். நமது ஆரோக்கியம் தொடர்பான விஷயம். இது அரசியல் இல்லை என்றார்.
முன்னதாக மாநில சுகாதரத்துறை அமைச்சர்கள் மற்றும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள்/ சுகாதாரச் செயலாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிலையங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில். கொரோனா உள்ளிட்ட சுவாச பாதிப்பு நோய்கள் அதிகரித்து வருவதால் தயார் நிலையில் மருத்துவமனைகளை வைத்திருக்குமாறு இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாம்.
வரவிருக்கும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல், சங்கராந்தி உள்ளிட்ட பண்டிகை காலத்தில், கொரோனா பரவும் அபாயத்தை குறைக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கைகள் மற்றும் பிற ஏற்பாடுகளை செய்யுமாறு மாநில மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளதாம்- மேலும் கொரோனா தொடர்பான சோதனையை அதிகரிக்குமாறும் மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளதாம். கொரோனாவிற்கு எதிரான புதிய திருத்தப்பட்ட கண்காணிப்பு உத்திகளின் படி செயல்பட வேண்டும் என்றும் மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications