அது வீக் எண்ட்.. அதனால்தான் அப்படி.. பட்ஜெட் அன்று ஏற்பட்ட பங்கு சந்தை சரிவுக்கு நிர்மலா விளக்கம்!
Recommended Video
டெல்லி: மத்திய பட்ஜெட் சனிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்ட காரணத்தால்தான் அன்று பங்கு சந்தை சரிந்தது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றத்தில் நடப்பு நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த சனிக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரண்டாவது முறையாக இன்று இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் வருமான வரி அறிவிப்பு தொடர்பான முக்கியமான அறிவிப்புகள் வெளியானது
ஆனால் இந்த அறிவிப்புகள் இந்திய பொருளாதாரத்தில் பெரிய மாற்றம் எதையும் ஏற்படுத்தாது என்கிறார்கள். அதேபோல், இந்த பட்ஜெட் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்தது.

என்ன விமர்சனம்
இந்த நிலையில் பட்ஜெட் அன்று மும்பை பங்கு சந்தை பெரிய அளவில் சரிந்தது. பொதுவாக சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பங்கு சந்தை திறக்கப்படாது. ஆனால் கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனால் அன்று மட்டும் சிறப்பு தினமாக பங்கு சந்தை திறக்கப்பட்டது. ஆனால் காலையிலேயே பங்கு சந்தை சரிவுடன்தான் தொடங்கியது. இது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.

சரிவு
ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கி சில நிமிடத்தில் பங்கு சந்தை உயர்ந்தது. ஆனால் அதுவும் நீண்ட நேரத்திற்கு நீடிக்கவில்லை. வரிசையாக பங்கு சந்தை நிமிடத்திற்கு நிமிடம் வீழ்ச்சி அடைய தொடங்கியது. நாள் இறுதியில் என்எஸ்இ நிஃப்டி 300 புள்ளிகள் குறைந்து 11661 புள்ளியில் முடிந்தது. அதேபோல் பிஎஸ்இ சென்ஸ்க்ஸ் 987.96 புள்ளிகள் சரிந்து 39735 புள்ளியில் முடிந்தது.

மார்க்கெட் சரிவு
இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்தில் மார்க்கெட் இப்படி சரிந்தது மத்திய அரசை அதிர்ச்சி அடைய செய்தது. இதனால் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை பலரும் விமர்சனம் செய்தனர். இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்துள்ளார், அதில், பொதுவாக சனிக்கிழமையில் பங்கு சந்தை இருக்காது. அன்று பட்ஜெட் என்பதால் திறக்கப்பட்டது. ஆனாலும் அது வார இறுதி நாள் என்பதால் வீழ்ச்சியுடன் முடிந்தது.

பதில் அளித்தார்
வார இறுதி நாட்களில் பட்ஜெட் பெரிய அளவில் உயராது. மக்கள் பங்குகள் மீது அப்போது ஆர்வம் செலுத்த மாட்டார்கள். ஆனால் திங்கள் வரை காத்திருக்க வேண்டும். திங்கள் கிழமை கண்டிப்பாக பட்ஜெட் உயரும். திங்கள் கிழமை வரும் முடிவுதான் உண்மையானது. திங்கள் கிழமை பங்கு சந்தை பெரிய அளவில் உயர்வை சந்திக்கும். இது உறுதி என்று, நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

எப்படி சர்ச்சை
முன்னதாக நாடு முழுக்க வெங்காய விலை உயர்ந்த போதும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதேபோல் கருத்தை தெரிவித்தார். வெங்காய விலை உயர்வு குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், நான் வெங்காயமும் பூண்டும் அதிகமாக சாப்பிடுவதில்லை. வெங்காயம் மற்றும் பூண்டு அதிகம் சாப்பிடாத குடும்பத்தில் இருந்து வந்தவள் நான், என்றார்.மத்திய அமைச்சரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் இன்னொரு சர்ச்சை கருத்தை அவர் தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications