PMAY யோஜனாவில் ஆச்சரியத்தில் மக்கள்! பிரதமர் வீட்டு திட்டத்தில் ரூ.222 கோடி மோசடி செய்த கம்பெனி
டெல்லி: பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டம் 2.0ன் கீழ், மேலும் 1.41 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக சமீபத்தில்தான் தகவல் வெளியாகியிருந்தது.. இந்நிலையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் சலுகைகளை தவறாக பயன்படுத்தி, மிகப்பெரிய மோசடி சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை தந்து வருகிறது. என்ன நடந்தது?
PMAY எனப்படும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை பிரதமரின் வீடு கட்டும் திட்டம் என்பார்கள்.. இது நாட்டில் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு சொந்த வீடு வழங்கும் நோக்கில் தொடங்கப்பட்டது. இது அந்த குடும்பங்களுக்கு நம்பிக்கை மற்றும் பாதுகாப்பான வாழ்விடத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான மத்திய அரசின் திட்டமாகும்.

பிரதமரின் வீடு கட்டும் திட்டம்
இத்திட்டத்தின்கீழ், நிலமுள்ளோருக்கு வீடு கட்ட மானியம் வழங்குவது, வங்கி கடனில் வீடு வாங்குவோருக்கு, வட்டியில் மானியம் வழங்குவது போன்றவைகளை நடைமுறைப்படுத்துகிறது
அந்தவகையில், இதுவரை சுமார் 2.81 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின்கீழ், 29.07.2025 நிலவரப்படி, 4.12 கோடி வீடுகள் என்ற ஒட்டுமொத்த இலக்கை (கட்டம் I + கட்டம் II) மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு ஒதுக்கியிருக்கிறது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் 3.84 கோடி பயனாளிகளுக்கு அனுமதியும் தரப்பட்டுள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா
மத்திய அரசின் இத்திட்டத்தில் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு வீடு கட்ட தலா ரூ.2.5 லட்சம் நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டது..
பிறகு இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நகர்ப்புற வீட்டு வசதி 2.0 திட்டத்தை மத்திய அரசு ஆரம்பித்தது.. இதைத்தவிர, பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா நகர்ப்புற திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வீட்டு வசதி திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையைத் துரிதப்படுத்துவதற்காகவே, அங்கிகார் 2025 என்ற பிரச்சாரமும் துவங்கப்பட்டுள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.
இப்படி ஏழை, எளிய மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த திட்டத்தில், மோசடி ஒன்று நடந்துள்ளது..
பல கோடி ரூபாய் மோசடி
ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்த ஓஷன் செவன் பில்ட்டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்த திட்டத்தின் நம்பிக்கையை தவறாக பயன்படுத்தி, பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. அதாவது, வீடு வாங்க முன் பதிவு செய்த மக்களுக்கு, போலியான காரணங்களை சொல்லி ஒதுக்கீட்டை ரத்து செய்து, அதே வீடுகளை வேறு நபர்களுக்கு அதிக விலையில் விற்றுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 13ம் தேதி, நிறுவன இயக்குநர் சுவராஜ் சிங் யாதவ் கைது செய்யப்பட்டார். திட்டத்தின் கீழ் ஒரு வீட்டின் விலை ரூ.26.5 லட்சம் என்றால், இவர் சில வீடுகளை ரூ.50 லட்சத்துக்கு விற்றுள்ளாராம்.. இதன்மூலம், இந்நிறுவனம் ரூ.222 கோடி வசூலித்துள்ளதாக அமலாக்கத்துறை கணித்து சொல்கிறது.
அமலாக்கத்துறை - குற்றப்பத்திரிகை
அதுமட்டுமல்ல, இந்த மோசடி பெரும்பாலும் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களையே பாதித்துள்ளது.. இவர்கள் அனைவருமே அரசு உதவியை எதிர்பார்த்து திட்டத்தில் பதிவு செய்திருந்தவர்களாம்.. இப்படியொரு மோசடி நடந்துவிட்டதால், இத்திட்டத்தின் சலுகைகளை இன்று இழந்துள்ளனர்.
இப்படிப்பட்ட சூழலில், ஓஷன் செவன் பில்ட்டெக் இயக்குநர் மற்றும் மற்ற இயக்குநர்களுக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் திட்டம் உள்ளதாக தற்போது அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது... மேலும் இச்சம்பவத்தை தீவிரமாக ஆராய்ந்து, பொது நலனுக்கு எதிரான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளது..
மத்திய அரசின் சூப்பர் திட்டம்
இந்த மோசடி சம்பவம் நாடு முழுவதுமே மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.. காரணம், பிரதமரின் வீடு திட்டமானது, குறைந்த வருமானம் உள்ளோருக்கு மிகுந்த பலனை தரும் சூப்பர் திட்டமாக கருதப்படுகிறது..
அப்படியிருக்கும்போது, ஒருசிலர் திட்டத்தை தவறாக பயன்படுத்தி மோசடிகளில் இறங்கிவிடுவது, இத்திட்டத்தின் மீதான நம்பிக்கையையே குலைக்கும்படி அமைந்துவிடுகிறது.. இப்படியான மோசடிகளுக்கெல்லாம் அரசுதான் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கி உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications