சிக்கினார் சின்ன தல..சுரேஷ் ரெய்னா - ஷிகர் தவானின் ரூ.11.14 கோடி சொத்துகள் முடக்கம்.. அமலாக்கத்துறை அதிரடி.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானின் ரூ.11.14 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை இன்று அதிரடியாக முடக்கம் செய்துள்ளது. சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரத்தில் சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் நடந்ததை கண்டுபிடித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த வழக்கில் சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவானிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அவர்களின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்து முடக்கத்தின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வருமாறு:

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் சுரேஷ் ரெய்னா. அதேபோல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கலக்கியவர் ஷிகர் தவான். இந்திய அணியில் நீண்டகாலமாக அவர்களுக்கு விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் ஓய்வு அறிவித்துள்ளனர்.

betting-case-ed-attaches-rs-11-14-crore-worth-assets-of-suresh-raina-and-shikhar-dhawan

சுரேஷ் ரெய்னா ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். தோனிக்கு அடுத்தபடியாக தமிழக ரசிகர்கள் அதிகமாக கொண்டாடப்பட்டார். தோனியை ரசிகர்கள் ‛தல‛ என அழைப்பது போல் சுரேஷ் ரெய்னாவை ‛சின்ன தல’ என்று அன்போடு அழைத்தனர்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ஆகியோர் வர்ணணையாளராக அவ்வப்போது பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் அமலாக்கத்துறை சார்பில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானின் சொத்துகள் அதிரடியாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் சொத்தமான ரூ.11.14 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது.

அதன்படி பார்த்தால் சுரேஷ் ரெய்னாவின் பெயரில் உள்ள ரூ.6.64 கோடி மியூச்சுவல் பண்ட் சொத்துகளும், ஷிகர் தவானின் பெயரில் உள்ள ரூ.4.5 கோடி மதிப்பிலான அசையா சொத்துகளையும் அமலாக்கத்துறை இன்று முடக்கம் செய்துள்ளது. சூதாட்ட செயலிகள் தொடர்பான விளம்பரங்களில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதுதொடர்பாக சூதாட்ட செயலி சார்ந்த விளம்பரங்களில் நடித்த நடிகர், நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பி அமலாக்கத்துறை விசாரித்து இருந்தது. இந்நிலையில் தான் இன்று அவர்களின் சொத்துகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சொத்து முடக்கத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. அதாவது சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் மீது பிஎம்எல்ஏ எனும் சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் 2 பேரும் 1xBet என்ற வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் பெற்று அதன் துணை மற்றும் மாற்று பிராண்டுகளை சட்டவிரோதமாக பிரபலப்படுத்தி பணம் பெற்றுள்ளனர். இந்த பணத்தை அவர்கள் சட்டவிரோதமாக பெற்றுள்ளனர். அதாவது வெளிநாட்டில் இருந்து Layered transactions முறையில் பணத்தை பெற்றுள்ளனர். மேலும் நம் நாட்டில் 1XBet நிறுவனத்துக்கு அனுமதியில்லை என்பது தெரிந்தே இருவரும் இந்த ஒப்பந்தத்தின் மூலமாக பணம் பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவானுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இன்னும் பல பிரபலங்கள் சிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஆன்லைன் சூதாட்டம் சார்ந்த சட்டவிரோதமாக புரோமோஷன் செய்து பணம் வாங்கிய புகார் இன்னும் பலர் மீது உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகர் சோனு சூட், ஊர்வசி ரவுடேலா, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி மிமி சக்கரபோர்த்தி, பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா உள்ளிட்டவர்களிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. இதனால் அடுத்தடுத்து இந்த பிரபலங்களும் சிக்கலில் சிக்கலாம் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+