6 - 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி.. மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி
டெல்லிடெல்லி: 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.னா தடுப்பூசி செலுத்த, இந்திய மருந்து தர கட்டப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கடந்த 2 வருடங்களாகவே கொரோனா வைரஸ் தொற்று உலகை பீடித்து வருகிறது.. நம் இந்தியாவிலும் நோய் தொற்று பரவல் தீவிரமானது..
இந்த கொரோனாவுக்கு சிகிச்சை, மருத்துவம் இல்லாத நிலையில் தடுப்பூசி மட்டுமே கை கொடுத்து உதவி வருகிறது.. இந்தியாவில் இதுவரை 187 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியா
கடந்த மார்ச் மாதம் முதல் 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது... இதற்காக நாடு முழுவதும் பல பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டன.. இதே போல 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன.. காரணம், பெரியவர்களையும் தாண்டி குழந்தைகளுக்கு இந்த வைரஸ் பரவி விடக்கூடாது என்பதற்காக, கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

6 - 12 வயது
அந்தவகையில், குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் குறித்து, கடந்த சில மாதங்களாகவே, பாரத் பயோடெக் நிறுவனம் ஆய்வு பணியில் ஈடுபட்டு இருந்தது.. பிறகு, அந்த ஆய்வு பணி முடிவடைந்ததையடுத்து பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசி 6 வயது முதல் 12 வயதுடைய சிறுவர், சிறுமியர்களுக்கு செலுத்த இந்திய மருத்து தர கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது...

விண்ணப்பம்
இது தொடர்பாக, கடந்த ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் துறை ரீதியான நிபுணர் குழுவும் ஆலோசனை மேற்கொண்டது.. முன்னதாக, பாரத் பயோடெக் இண்டர்நேஷனல் நிறுவனமானது, தடுப்பூசியின் 2-வது மற்றும் 3-வது கட்ட மருத்துவ சோதனையை 2 முதல் 18 வயதிற்குட்பட்டவர்களிடையே மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தது.. இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் ஆய்வுக்கு பிறகு தற்போது, 6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது...

பிரதமர் மோடி
அவசர கால பயன்பாட்டுக்காக இந்த ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வரும் சூழலில், சிறுவர், சிறுமிகளையும் பாதுகாக்க தற்போது கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது... இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பை பிரதமர் விரைவில் வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.. அப்படி ஒரு அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், நாடு முழுவதும் சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.

தரவுகள்
இதற்கான அனுமதியை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் துறைத் தலைவரான இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வழங்கியுள்ளார்... மேலும், கோவாக்சின் தடுப்பூசியின் பாதுகாப்பு தகவல்கள் மற்றும் உரிய தரவுகளை தொடர்ந்து சமர்ப்பிக்குமாறும், முதல் 2 மாதங்களுக்கு 15 நாள் இடைவெளியில் தடுப்பூசியால் ஏற்படும் விளைவுகள் பற்றிய சரியான பகுப்பாய்வு நடத்தப்பட வேண்டும் என்றும், 5 மாதங்களுக்கு பின், ஒவ்வொரு மாதமும் உரிய பகுப்பாய்வு நடத்தி பாதுகாப்பு தரவுகளை தொடர்ந்து சமர்ப்பிக்குமாறும் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கேட்கப்பட்டுள்ளது.

அனுமதி
இது தவிர, மேலும் 2 தடுப்பூசிகளுக்கு மருந்து கட்டுப்பாட்டாளர் ஒப்புதல் அளித்துள்ளார்... 5-12 வயதுக்குட்பட்டவர்களுக்கு, கோர்ப்வாக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் ஜெனரல் வழங்கியுள்ளார். 18 வயது பூர்த்தி அடைந்தவர்களுக்கு, சைடஸ் காடிலாவின் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின், கோவிஷில்டு, ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.. இதைத்தவிர்த்து 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களும் இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது... மேலும் 12 முதல் 14 வயது வரை உள்ளவர்களுக்கு "கோர்பேவாக்ஸ்" என்ற தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில், இந்நிலையில் 6 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மத்திய மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி அளித்துள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. .

பேட்டி
முன்னதாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்திருந்தார்.. பெங்களூரில் செய்தியாளர்களிடம் இதை பற்றி அவர் சொல்லும்போது, 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு எந்தவிதமான தயக்கமும் இன்றி பெற்றோர் தடுப்பூசி போட முன்வர வேண்டும், 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு உடனடியாக பெற்றோர் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்.

அதிகரிப்பு
ஏனெனில் நாட்டில் பல மாநிலங்களில் கொரோனா அதிகரித்திருப்பதால், 4-வது அலைக்கான முன் எச்சரிக்கை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 4-வது அலை உருவான பின்பு தடுப்பூசி போடுவதற்கு முன்பாக முன் எச்சரிக்கையாக, இப்போதே அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்" என்று மத்திய அமைச்சர் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications