அட இதிலுமா.. ஜி 20 தலைவர்களுக்கு ஜனாதிபதி அளித்த விருந்து.. மெனு கார்டிலும் இடம் பிடித்த "பாரத்"
டெல்லி: ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளித்தார். இதில், பிரதிநிதிகளுக்கு பானிபூரி, சாட் போன்ற இந்தியாவின் ஸ்பெஷலான தெரு உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு ஸ்பெஷலாக வழங்கப்பட்டன.
ஜி 20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு ஜனாதிபதி விருந்து அளித்தார். இதில், பிரதிநிதிகளுக்கு பானிபூரி, சாட் போன்ற இந்தியாவின் ஸ்பெஷலான தெரு உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு ஸ்பெஷலாக வழங்கப்பட்டன.

இதுகுறித்து பேசிய ஜி20 செயல்பாடுகளுக்கான சிறப்பு செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி, இந்தியாவின் தெரு உணவுகளை உலக பிரநிதிகளிடம் கொண்டு செல்வதே ஒட்டுமொத்தமான எண்ணம், சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகளை அவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். அதேசமயம், பிரதிநிதிகள் இந்தியாவின் பல்வேறு பிராந்திய உணவு வகைகளையும் அனுபவிக்க வேண்டும்.
எங்கள் சமையல் கலைஞர்கள் பல்வேறு வகையான தானியங்கள், பல்வேறு வகையான காய்கறிகள் மூலம் மிகவும் ஸ்பெஷலான உணவுகளுடன் தயாராகின்றனர் எனக் கூறினார். ஜி20 தலைவர்களுக்கான மெனுவில் சிறுதானியங்கள் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும். பல்வேறு வகையான பிராந்திய உணவு வகைகளை உருவாக்க சமையல் கலைஞர்கள் பணியாற்றினர் எனத் தெரிவித்துள்ளார் அவர்.
தெரு உணவுகள்: உணவுப்பட்டியலில் சிறுதானியங்களால் செய்யப்பட்ட தாளி, புலாவ், இட்லி ஆகியவை முக்கிய இடம்பெற்றதாக எனத் தெரிகிறது. தாஜ் ஹோட்டல் மெனுவில் குஜராத், ராஜஸ்தான் மற்றும் மஹாராஷ்டிராவின் ஸ்பெஷல் உணவுகளில் ஒவ்வொரு தட்டில் 12 உணவுகள் உள்ளன. அதே சமயம் ஹை டீக்கான மெனுவில் டெல்லியில் இருந்து சாட், மகாராஷ்டிராவில் இருந்து பாவ் பாஜி மற்றும் தமிழ்நாட்டின் பணியாரம் உட்பட நாடு முழுவதும் ஸ்பெஷலாக உள்ள தெரு உணவுகள் இடம்பெற்றது
மெனுவின் இடம் பெற்றிருந்த வார்த்தையில், அனைத்து பன்முகத்தன்மை அதன் சுவையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளது என்ற வாசகத்துடன் தொடங்கியது. பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் காலநிலை ஆகியவற்றின் கலவையாகும். பாரத் பல வழிகளில் பன்முகத்தன்மை கொண்டது. சுவை நம்மை இணைக்கிறது.
பாரத் என மாற்றமா?: இந்தியாவின் பெயரை ‛பாரத்' என மாற்றம் செய்ய மத்திய அரசு முயற்சிப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன. வரும் 18 ம் தேதி முதல் 22ம் தேதி டெல்லியில் நாடாளுமன்ற கூட்டம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இதற்கான சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதற்கிடையே தான் சில நாட்களுக்கு முன்பு ஜி20 மாநாட்டையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு இன்று இரவு சிறப்பு விருந்து அளிக்கிறார். இதில் பங்கேற்க தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கான அழைப்பிதழில் ‛President of India' என்பதற்கு பதில் ‛President of Bharat' என அச்சிடப்பட்டு இருந்தது. அதேபோல் பிரதமர் மோடியின் இந்தோனேசியாவின் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையிலும் Prime Minister of Bharat என குறிப்பிடப்பட்டு இருந்தது.
பெயர் பலகையில்: இன்று நடைபெற்ற ஜி 20 மாநாட்டிலும், ‛‛இந்தியா'' என்பதற்கு பதில் ‛‛பாரத்'' என பிரதமர் மோடி வரவேற்று பேசினார். இதுமட்டுமின்றி பொதுவாக இதுபோன்று உலக நாடுகளின் தலைவர்கள் அதிகம் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் அவர்களின் அருகேயும் அவர்களின் நாட்டை குறிக்கும் பெயர் பலகை வைக்கப்படும். அந்த வகையில் ஜி20 உச்சி மாநாட்டின்போதும் ஒவ்வொரு தலைவர்கள் பக்கத்திலும் பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது.
அப்போது பிரதமர் மோடியின் முன்பு வைக்கப்பட்ட பெயர் பலகையில் ‛இந்தியா' என்பதற்கு பதில் ‛பாரத்' என எழுதப்பட்டு இருந்தது. இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் உலகில் மிகப்பெரிய அமைப்பாக உள்ள ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடியின் முன்பு ‛பாரத்' என பெயர் பலகை வைத்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பேசுப்பொருளாகி உள்ளது.












Click it and Unblock the Notifications