டெல்லிக்குள் நுழைந்த பாரத் ஜோடோ யாத்திரை.. ராகுலின் பாதுகாப்பில் குளறுபடி.. அரண் போல வந்த தொண்டர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வயநாடு தொகுதி எம்.பி ராகுல் காந்தி 'இந்திய ஒற்றுமைப்பயணம்' என்ற பெயரில் நாடு முழுவதும் பாத யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தற்போது டெல்லிக்குள் அவரது பாத யாத்திரை நுழைந்துள்ள நிலையில், பாதயாத்திரையில் ராகுல் காந்திக்கு போதுமான பாதுகாப்பு வழங்காதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாதுகாப்பில் காட்டப்பட்டு இருக்கும் அலட்சியம் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை கொடுத்துள்ளது

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாதயாத்திரை செல்கிறார்.

இந்திய ஒற்றுமைப்பயணம் என்ற பெயரில் பாத யாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ராகுல் காந்தி தொடங்கினார்.

108-வது நாளில் பாத யாத்திரை

108-வது நாளில் பாத யாத்திரை

ராகுல் காந்தியின் இந்த பாத யாத்திரையில் வழிநெடுக காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்று வருகின்றனர். தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு புது உத்வேகத்தை ராகுலின் பாத யாத்திரை அளிக்கும் என்று அவரது கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சுமார் 3 மாதத்திற்கும் மேலாக ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடந்து கொண்டிருக்கிறது. ராகுல் காந்தியி பாத யாத்திரை இன்று 108-வது நாளை எட்டியுள்ளது.

 டெல்லியில் நுழைந்த யாத்திரை

டெல்லியில் நுழைந்த யாத்திரை

ஹரியானா மாநிலத்தில் இருந்து பத்ராபூர் வழியாக தலைநகர் டெல்லிக்குள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று காலை நுழைந்தது. முன்னதாக கொரோனா பரவலைக் காரணம் காட்டி ராகுல் காந்தி பாத யாத்திரையில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் பாத யாத்திரையை கைவிட வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தல் விடுத்து இருந்தது.

 ராகுலுக்கு உற்சாக வரவேற்பு

ராகுலுக்கு உற்சாக வரவேற்பு

தலைநகர் டெல்லிக்குள் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நுழைந்ததும், இந்த யாத்திரையில் சோனியா காந்தியும் கலந்து கொண்டார். முகக்கவசம் அணிந்தபடி சோனியா காந்தி ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார். ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரைக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொண்டர்களும் கட்சி நிர்வாகிகளும் பெரும் அளவில் திரண்டு ராகுலுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பாதுகாப்பில் குளறுபடி

பாதுகாப்பில் குளறுபடி


ராகுல் காந்திக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால், அவரை யாரும் எளிதில் நெருங்கிவிட முடியாத அளவுக்கு பாதுகாப்பு தீவிரமாக இருக்கும். குறிப்பாக ராகுல் காந்தியின் பாத யாத்திரையின் போது அவரை சுற்றிலும் கயிறுகள் பிடிக்கப்பட்டு இருக்கும். யாரேனும் திடீரென்று உள்ளே வந்து பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திவிடக்கூடாது என்ற அடிப்படையில் இத்தகைய பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

 காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி

காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி

ஆனால், இன்று டெல்லியில் நிலைமை தலைகீழாக இருந்தது. வழக்காமாக போலீசார் பாதுகாப்பு அணிவகுத்தபடி வருவதை காண முடியும். ஆனால், டெல்லியில் அத்தகைய பாதுகாப்பு ராகுலுக்கு வழங்கப்படவில்லை. இதனால், காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்தனர். கட்சி தொண்டர்களே ராகுலுக்கு பாதுகாப்பாக இருபுறமும் அரண் போல அணிவகுத்து வந்தனர்.

ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு

ஆம்புலன்சுக்கு வழிவிடுமாறு

தலைநகர் டெல்லியில் காவல்துறையின் கட்டுப்பாடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் வசம் உள்ளது கவனிக்கத்தக்கது. டெல்லியில் ராகுல் காந்தியின் பாத யாத்திரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதற்கிடையே இன்று காலை ராகுல் காந்தியின் பாத யாத்திரை அப்பல்லோ மருத்துவமனை அருகே வந்த போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதைக் கவனித்த ராகுல் காந்தி ஒரு நிமிடம் தனது யாத்திரையை நிறுத்தினர். அங்கிருந்த தொண்டர்களையும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அறிவுறுத்தினார்.

12 மாநிலங்களை கடந்து

12 மாநிலங்களை கடந்து

இதையடுத்து ஆம்புலன்ஸ் எந்த சிரமும் இன்றி அப்பகுதியை கடந்து சென்றது. ராகுல் காந்தியின் இன்று 23 கி.மீட்டர் தொலைவுக்கு நடைபயணமாக சென்று டெல்லி செங்கோட்டையை அடைகிறார். ராகுல் காந்தி இதுவரை 12 மாநிலங்களை கடந்து டெல்லி வந்துள்ளார். அதாவது 108 நாட்களில் 3 ஆயிரம் கி.மீட்டர் தொலைவுக்கு ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+