பீகார் தேர்தல் பணிகள் முழு வீச்சில்... உரிய காலத்தில் நடைபெறும்- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
டெல்லி: பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதாகவும் உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
இந்தியா டுடே டிவிக்கு சுனில் அரோரா அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
பீகார் சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும். உரிய காலத்தில் பீகார் சட்டசபை தேர்தல் நடைபெறும். அம்மாநிலத்தில் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

தற்போதைய கொரோனா காலத்தில் வாக்காளர்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்ய வேண்டி இருக்கிறது. ஆகையால் சமூக இடைவெளியை பின்பற்றுதல், தூய்மைப்படுத்துதல், முக கவசங்கள், கையுறை அணிவது ஆகியவை குறித்த வழிகாட்டுதல்கள் கடைபிடிக்கப்படும்.
ஒரு வாக்குச் சாவடியில் 1,000 வாக்காளர்கள் ம்ட்டுமே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை 33,797 வாக்கு சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்படி பார்த்தால் 678 முதல் 985 வாக்காளர்கள் மட்டுமே ஒரு வாக்குச் சாவடியில் வாக்களிப்பார்கள்.
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை அதிகப்படுத்தப்படுவால் பணியாளர்கள், உபகரணங்கள் உள்ளிட்டவை எண்ணிக்கையும் அதிகரிக்கும். அதற்கேற்பவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா காலத்திலும் கூட பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கலாம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்த அனைத்துவகை டிஜிட்டல் யுக்திகளையும் தேர்தல் ஆணையம் பயன்படுத்தும். இவ்வாறு சுனில் அரோரா கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications