முதல்வர் பதவியை துறக்கும் நிதிஷ்? பாஜக ஆடும் பவர் கேம்.. இறுதியானது பீகார் அமைச்சரவை.. முக்கிய தகவல்
டெல்லி: பீகாரில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 202 இடங்களில் வென்றது. ஜேடியு மற்றும் பாஜக என இரு கட்சிகளுமே அதிகப்படியான இடங்களில் வென்ற நிலையில், எந்தக் கட்சிக்கு அமைச்சரவையில் எத்தனை இடம் என்பது இறுதி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், முதல்வர் பதவியில் யார் தொடர்வார் என்பதிலும் தெளிவு கிடைத்துள்ளதாம். இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
பீகார் மாநிலத்தில் கடந்த நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு, கடந்த 14ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. என்டிஏ கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்திருந்த நிலையில், அந்தக் கூட்டணியில் இருந்த பாஜக, ஜேடியு என இரு கட்சிகளுமே கிட்டத்தட்ட சம அளவு சீட்களை பெற்றது.

இறுதியான பீகார் அமைச்சரவை
இதனால் பீகாரில் அடுத்த முதல்வர் யார்.. அமைச்சரவையில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் எனப் பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதற்கிடையே பீகாரில் அமைச்சரவை இறுதி செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய பீகார் அமைச்சரவையில் பாஜகவுக்குக் கணிசமான பிரதிநிதித்துவம் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல்வர் யார்!
அதேபோல முதல்வர் யார் என்பதிலும் அங்குக் கேள்வி நிலவி வந்தது. வாக்குப்பதிவுக்கு முன்பு என்டிஏ கூட்டணி யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவில்லை.. அமித் ஷா கூட தேர்தல் முடிந்த பிறகு எம்எல்ஏக்கள் இணைந்தே முதல்வரை தேர்வு செய்வார்கள் என கூறியிருந்தார். இதனால் முதல்வர் பதவி மாற்றப்படுமோ என்ற கேள்விகள் எழுந்தன. இருப்பினும், முதல்வர் பதவியில் நிதிஷ் குமாரே தொடர்வார் என பீகார் என்டிஏ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் இது தொடர்பான கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் தான் இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி அமைச்சரவையில் பாஜகவுக்கு சுமார் 15 முதல் 16 இடங்கள் கிடைக்கும். அதேபோல ஜேடியுவில் இருந்து சுமார் 14 பேர் அமைச்சராகப் பதவியேற்பார்கள்.
இதர கட்சிகள்
இரு கட்சிகளைத் தவிர்த்து என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிக்கும் லோக் ஜன் சக்தி 19 இடங்களை வென்றிருந்தது. அந்த கட்சிக்கு மூன்று அமைச்சரவைப் பதவிகள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேபோல 5 இடங்களை வென்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா மற்றும் 4 இடங்களை வென்ற ராஷ்ட்ரிய லோக மோர்ச்சா கட்சிகளுக்குத் தலா ஒரு இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவை பதவியேற்பு விழா நவம்பர் 19 அல்லது 20 ஆம் தேதிகளில் நடைபெறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 243 உறுப்பினர்களைக் கொண்ட பீகாரில் என்டிஏ மொத்தம் 202 இடங்களில் வென்றன. குறிப்பாக பாஜக 89 இடங்களையும், ஜேடியு 85 இடங்களையும் கைப்பற்றின.
மற்ற கட்சிகள்
ஆர்ஜேடி, காங்கிரஸ் மற்றும் மூன்று இடதுசாரி கட்சிகள் அடங்கிய 'மகா கூட்டணி' அங்கு 35 இடங்களில் மட்டுமே வென்றது. ஆர்ஜேடி 25 இடங்களில் மட்டுமே வென்ற நிலையில், காங்கிரஸ் 6 இடங்களைக் கைப்பற்றியது. கூட்டணியில் இருந்த இதர கட்சிகள் 3 இடங்களில் வென்றன. முன்னாள் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சி 238 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும், ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. ஓவைசியின் மஜ்லீஸ் கட்சி ஐந்து இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications