நாளை "இந்தியா" கூட்டணி கூட்டம்- மமதாவை தொடர்ந்து நிதிஷ்குமார் ஆப்சென்ட்- அப்ப மூடுவிழா 'கன்ஃபார்ம்'?
டெல்லி: "இந்தியா" கூட்டணியின் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியை தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் வரை பாஜகவுக்கு எதிரான "இந்தியா" கூட்டணி ரொம்பவே ஆக்டிவ்வாக இருந்தது. "இந்தியா" கூட்டணியின் விஸ்வரூபமும் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களை அசைத்துப் பார்க்கவும் தொடங்கியது.

நிதிஷ்குமார் அதிருப்தி: 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவித்ததுதான் தாமதம்.. "இந்தியா" கூட்டணி அமைப்பையே அதில் இடம் பெற்ற கட்சிகள் மறந்துவிட்டன. 5 மாநில தேர்தல்களில் கூட "இந்தியா" கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக களம் காணவில்லை. அப்போதே "இந்தியா" கூட்டணிக்கு என்னாச்சு? என அதனை உருவாக்கியவரான நிதிஷ்குமாரே கிண்டலடித்திருந்தார். அத்துடன் 5 மாநில தேர்தல் முடிந்ததும் காங்கிரஸ் இந்தியா கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் எனவும் கணித்திருந்தார் நிதிஷ்குமார்.
5 மாநில தேர்தல் முடிவுகள்: தற்போது 5 மாநில தேர்தல் முடிவடைந்துவிட்டது. தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. சத்தீஸ்கர், ராஜஸ்தானில் ஆட்சியை பாஜகவிடம் பறிகொடுத்தது காங்கிரஸ். மத்திய பிரதேசத்தில் பாஜகவும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டது. 'இந்தியா' கூட்டணி ஒற்றுமையுடன் தேர்தலை எதிர்கொண்டிருந்தால் களம் வேறாகவோ பாஜகவுக்கு கடினமானதாகவோ இருந்திருக்கலாம் என்பது அரசியல் பார்வையாளர்கள் கருத்து.
மமதா கோபம்: இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு டிசம்பர் 6-ந் தேதி "இந்தியா" கூட்டணி கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே அறிவித்தார். ஆனால் இந்த கூட்டம் பற்றி எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை. அதனால் என்னால் டிசம்பர் 6-ந் தேதி கூட்டத்தில் பங்கேற்க முடியாது என திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி தெரிவித்துவிட்டார்.
நிதிஷ்குமார் பங்கேற்கவில்லை: அதேபோல "இந்தியா" கூட்டணியின் பிதாமகனான பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. "இந்தியா" கூட்டணியின் நாளைய ஆலோசனைக் கூட்டத்தில் ஜேடியூ தலைவர் லாலன் சிங், பீகார் அமைச்சர் குமார் ஜா ஆகியோர் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோக்கு நீடித்தால் "இந்தியா" கூட்டணி என்பது பத்தோடு பதினொன்றாக பெயரளவுக்குதான் இருக்கும்; பாஜகவுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான அணியாக இருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications