Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேஜஸ்வி கட்சி படுதோல்வி.. ஆனாலும் ஜேடியு, பாஜகவை விட ஆர்ஜேடி பெற்ற வாக்குகள் அதிகம்! அது எப்படி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பீகார் தேர்தலில் ஆளும் என்டிஏ கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 200+ தொகுதிகளை அந்தக் கூட்டணி கைப்பற்றி இருக்கிறது. ஆனாலும், அங்குக் கட்சி வாரியாக பெற்ற வாக்கு சதவீதத்தை வைத்துப் பார்த்தால் ஆர்ஜேடி தான் அங்கு அதிக வாக்குகளைப் பெற்று இருக்கிறது. பாஜக, ஜேடியு கட்சிகளைக் காட்டிலும் அதிக வாக்குகளைத் தேஜஸ்வி கட்சி பெற்றிருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பீகார் மாநிலத்தில் கடந்த நவம்பர் 5 மற்றும் 11 என இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. அதில் காலை முதலே என்டிஏ கூட்டணி தான் முன்னிலையில் இருக்கிறது. கிட்டத்தட்ட 200+ தொகுதிகளில் பாஜகவின் என்டிஏ கூட்டணியே முன்னிலையில் இருக்கிறது.

Bihar Election Results 2025 Despite mega defeat Tejashwi RJD Gets More Votes Than BJP and JDU

வாக்குகள் அதிகம்

இதில் விஷயம் என்னவென்றால் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ஆர்ஜேடி தான் பீகாரில் இதுவரை அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாலை 6 மணியளவில் இருக்கும் டேட்டாவின்படி ஆர்ஜேடி கட்சி இதுவரை 22.86% வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இது பாஜக பெற்ற 20.42% வாக்குகளை விட கிட்டத்தட்ட 2.4% அதிகமாகும்.

பாஜக, ஜேடியு

அதேபோல முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி அங்கு 19.03% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதாவது ஆர்ஜேடி கட்சியை விட ஜேடியு கிட்டத்தட்ட 3.8% குறைவாகவே பெற்றுள்ளது. அதேநேரம் நாம் இங்கு இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். அதாவது 243 இடங்களைக் கொண்ட பீகாரில் ஆர்ஜேடி மொத்தம் 143 தொகுதிகளில் போட்டியிட்டது. மறுபுறம் பாஜகவும் ஜேடியு கட்சியும் தலா 101 தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

Bihar Election Results 2025 Despite mega defeat Tejashwi RJD Gets More Votes Than BJP and JDU

எவ்வளவு சீட்?

தேர்தல் ஆணைய தகவல்களின்படி மாலை 6 மணியளவில் பாஜக (முன்னிலை+ வெற்றி) அதிகபட்சமாக 90 இடங்களைக் கைப்பற்றுகிறது. அதாவது 101 இடங்களில் பாஜக போட்டியிட்ட நிலையில், வெறும் 10 தொகுதிகளில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடியவில்லை. அதேபோல ஜேடியு கூட 101ல் 83 (வெற்றி+ முன்னிலை) தொகுதிகளைக் கைப்பற்றும் சூழலில் இருக்கிறது.

மறுபுறம் ஜேடியு கட்சியைப் பொறுத்தவரை அது 143 தொகுதிகளில் போட்டியிட்டாலும் கூட வெறும் 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றுகிறது. கடந்த 2010ம் ஆண்டு பீகாரில் இதேபோல என்டிஏ அலை வீசியது. அந்தத் தேர்தலில் ஆர்ஜேடி வெறும் 22 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. இதுவே அக்கட்சியின் இரண்டாவது மோசமான தேர்தல் முடிவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பீகார் தேர்தல்

எதிர்க்கட்சி கூட்டணியின் முதல்வர் வேட்பாளரான தேஜஸ்வி யாதவ் கூடத் தான் போட்டியிட்ட ராகோபூர் தொகுதியில் முன்னிலை- பின்னடைவு என மாறி மாறியே சந்தித்து வருகிறார். இந்தியா கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகளின் நிலையும் கூட மோசமாகவே இருக்கிறது. 61 இடங்களைக் கேட்டு வாங்கிய காங்கிரஸ் வெறும் 5 அல்லது 6 தொகுதிகளை மட்டுமே வெல்லும் சூழல் இருக்கிறது. மற்ற எந்தவொரு கூட்டணிக் கட்சியும் 5 இடங்களைக் கூட தாண்டாத நிலையே இருக்கிறது.

பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜான் சுராஜ் கட்சி மற்றும் முகேஷ் சஹானியின் விகாஸ்ஷீல் இன்சான் கட்சி (VIP) போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+