"மார்பகத்தை வெட்டி!" பெண்ணை துடிக்க துடிக்க.. கொடூரம்! அதுவும் மார்கெட்டில் அத்தனை பேர் முன்னிலையில்
டெல்லி: ஷ்ரத்தா என்ற இளம் பெண் டெல்லியில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பே இன்னும் அடங்காத நிலையில், அதேபோல மற்றொரு ஷாக் சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது.
தலைநகர் டெல்லியில் சாதரா என்ற பெண்ணை அவரது காதலனே மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் அனைவரும் நினைவில் இருக்கும். அத்துடன் நில்லாமல் உடல் உறுப்புகளையும் 35 பீஸாக வெட்டி டெல்லியில் பல இடங்களில் போட்டார்
இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சி ஓய்வதற்குள், இதேபோல நாட்டில் பல இடங்களில் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பீகார் மாநிலத்தில் இதுபோலத் தான் இப்போது ஒரு ஷாக் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

பீகார்
பீகார் மாநிலத்தில் நீலம் தேவி என்ற பெண் பொது இடத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ஷகீல் என்பவர் தனது கூட்டாளியுடன் சேர்ந்து நீலம் தேவியின் கை, காது மற்றும் மார்பகங்களை வெட்டியுள்ளார். அந்த பெண்ணின் கால்களையும் அவர்கள் வெட்ட முயன்றுள்ளனர். இவ்வளவு நடந்த பிறகு தான் அங்கிருந்தவர்கள் இதைப் பார்த்துள்ளனர். இதனால் கால்களை வெட்டாமல் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.

மரண வாக்குமூலம்
இதில் படுகாயமடைந்த அந்த இளம் பெண் மாயாகஞ்சில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்களுக்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ரத்தம் அதிகம் வெளியேறியதே இந்தப் பெண் மரணத்திற்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், உயிரிழக்கும் இறுதி நிமிடத்தில் அந்த பெண், மரண வாக்குமூலத்தில் கொலையாளிகள் குறித்த தகவல்களைக் கூறியதாகக் கூறப்படுகிறது.

மார்பகத்தில் வெட்டு
அந்த ஊரின் கூட்டம் நிறைந்த சந்தை பகுதியில் இந்தக் கொடூரம் அரங்கேறியுள்ளது. அங்கிருந்த மக்களின் முன்னிலையில் இளம்பெண்ணைக் கூரிய ஆயுதத்தைக் கொண்டு அந்த இளைஞர் தாக்கியுள்ளார். முதலில் பெண்ணின் மார்பகத்தை வெட்டிய கொடூரன் பின், அவளது கைகள், கால்கள் மற்றும் காதுகளையும் வெட்டியுள்ளான். அக்கம் பக்கத்தினர் அந்த பெண் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார். பீகார் மாநிலம் பாகல்பூரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

என்ன நடந்தது
கொலை செய்யப்பட்ட அந்த பெண் ஏற்கனவே திருமணமானவர் என்று போலீசார் கூறுகின்றனர். அந்த பெண் வழக்கமாக இந்த சந்தைக்குத் தான் செல்வார். கடந்த சனிக்கிழமையும் அதேபோல சந்தைக்குச் சென்றுள்ளார். அங்கு ஆயுதத்துடன் மறைந்து இருந்த அந்த இளைஞர் பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளான் அந்த அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காகச் சந்தைக்குச் சென்றுள்ளார். அப்போது தான் இந்தக் கொடூரம் நடந்துள்ளது. இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர் முகமது ஷகீல் என்ற இளைஞர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
நீலம் தேவி மார்கெட்டிற்கு வந்த போது, மறைந்திருந்த ஷகீல் பின்னால் இருந்து தலையில் தாக்கியுள்ளான். பின்னர் கைகள், கால்களை, மார்பகங்களையும் வெட்டி கொடுமைப்படுத்தி உள்ளான்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நீலம் தேவியின் உடல் உடகூராய்வு செய்யப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு நீலம் தேவியின் நொறுங்கிய வளையல்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளி ஷகீல் மற்றும் அவனது கூட்டாளி முகமது ஜுதீன் ஆகியோரை கைது செய்தனர்.

கைது
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "அந்த பெண்ணின் மகன் தான் மார்கெட்டில் சென்றுவிட்டுள்ளார்.. தாயார் இறக்கிவிட்டு மகன் இந்தப் பக்கம் வந்த சில நொடிகளில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அனைவரது முன்னிலையில், ஷகீல் அந்தப் பெண்ணை தாக்கியுள்ளான் அவனைக் கைது செய்துவிட்டோம். எதற்காக இந்தக் கொடூரத்தைச் செய்தான் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். சிக்கனை வெட்டும் கத்தியைப் பயன்படுத்தி இந்த கொடூரத்தை அவன் அரங்கேற்றியுள்ளான்" என்றனர்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
தனிப்படை போலீசாருக்கு மீன் வறுவல் போட்டு கொடுத்த கொலையாளி! கடலூரில் அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட் -
சென்னையை அதிரவைத்த மூதாட்டி - சிறுவன் மீதான பாலியல் வன்கொடுமை.. தேசிய மகளிர் ஆணையம் அதிரடி -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்!












Click it and Unblock the Notifications