எரிந்து கிடந்த பேப்பரில் அப்படியே நீட் வினாத்தாள்! பள்ளி நம்பர் கூட அப்படியே இருக்கு! பரபர ரிப்போர்ட்
டெல்லி: இந்தாண்டு நீட் வினாத்தாள் கசிவு மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தனியாக வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாகப் பீகார் அரசு மத்திய அரசுக்கு ரிப்போர்ட் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளதை உறுதி செய்த பீகார் அரசு, இது தொடர்பாக வேறு சில தகவல்களையும் பகிர்ந்துள்ளது.
இந்தாண்டு நீட் தேர்வு தொடக்கம் முதலே சர்ச்சை தான். குறிப்பாக இந்தாண்டு நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

நீட் வினாத்தாள் லீக்: நீட் வினாத்தாள் லீக்: மேலும், இந்த விவகாரத்தில் பீகார் அதிகாரிகளும் மத்திய அரசுக்கு முக்கிய ரிப்போர்ட் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில் நீட் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தெளிவாகத் தெரிவதாக அதில் கூறப்பட்டுள்ளது. பீகாரின் பொருளாதார குற்றப்பிரிவு எரிந்த நிலையில், சில கேள்வித்தாள்களை மீட்டெடுத்துள்ளது. அதில் 68 கேள்விகள் இருந்த நிலையில், அவை அனைத்தும் நீட் வினாத்தாளுடன் பொருந்திப் போவதாக பீகார் அரசு தெரிவித்துள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பீகார் அரசின் ரிப்போர்ட்டில் மேலும், "கைது செய்யப்பட்ட மாணவர்கள் தங்கியிருந்த வீட்டில் இருந்து பீகார் போலீசார் எரிந்த நிலையில் வினாத்தாள்களைக் கைப்பற்றினர். அதில் ஒரு தனியார்ப் பள்ளியின் தேர்வு மையக் குறியீடு இருந்தது. அதாவது அந்த தேர்வு மையத்திற்குச் செல்லும் வினாத்தாள் தான் லீக் ஆகி இருக்கிறது. அது ஜார்கண்டின் ஹசாரிபாக்கில் உள்ள ஒரு தனியார்ப் பள்ளியாகும். அது தேர்வு மையமாகவும் செயல்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
எரிந்த நிலையில் வினாத்தாள்: எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட வினாத்தாள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த ரிப்போர்ட் அடிப்படையிலேயே இந்த விவகாரத்தை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கல்வி அமைச்சகம் முடிவு செய்தது.
இந்த நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாகி வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த விவகாரத்தில் மேலும் ஐந்து பேரை பீகார் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்தனர். இதன் மூலம் இந்த பேப்பர் லீக் விவகாரத்தில் கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
காலதாமதம் ஏன்: உறுதியாக வினாத்தாள் லீக் ஆகி இருக்கிறது எனப் பீகார் சொல்ல மற்றொரு முக்கிய காரணமும் இருக்கிறது. அதாவது எரிந்த அந்த வினாத்தாள் காப்பியில் இருக்கும் வரிசை எண்களும் அசல் கேள்வித்தாள் எண்களும் ஒரே மாதிரி இருந்துள்ளன. எரிந்த நிலையில் வினாத்தாள்கள் முன்கூட்டியே கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் அசல் வினாத்தாள்கள் விவகாரங்களை மாநில அரசுடன் தேசிய தேர்வுகள் முகமை தயக்கம் காட்டியுள்ளது.
இதன் காரணமாகவே அதை ஒப்பிட்டுப் பார்ப்பதில் காலதாமதம் ஆகி இருக்கிறது. இந்த விஷயம் பூதாகரமான பிறகு, கடந்த வாரம் தான் பீகார் அரசுடன் தேசிய தேர்வு முகமை இந்த தகவல்களைப் பகிரத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
லீக் ஆனது எப்படி: வினாத்தாள்கள் எப்போது லீக் ஆனது, எங்கே லீக் ஆனது என்பதைக் கண்டுபிடிக்க இப்போது பீகார் அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். வினாத்தாள் பிரிண்ட் அடிக்கப்படும் இடத்தில் இருந்து தேர்வு மையம் வரை எப்படிச் செல்லும் என்ற தகவல்கள் இப்போது தான் பீகார் போலீசார் கைகளில் கிடைத்துள்ளது. எனவே, அதை வைத்து வினாத்தாள் எங்கே லீக் ஆனது என்பதைக் கண்டறியும் முயற்சியில் பீகார் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
ஜார்க்ண்டில் பள்ளிக்குச் செல்ல வேண்டிய வினாத்தாள் தான் லீக் ஆனது உறுதியான நிலையில், பீகார் அதிகாரிகள் இரண்டு நாட்களுக்கு முன்பு அங்குச் சென்று சோதனை செய்தனர். வினாத்தாள்கள் வந்த கவர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு கவர் மட்டும் வழக்கமாகக் கவர் கட் செய்யப்படும் இடத்திற்குப் பதிலாக வேறு ஒரு இடத்தில் இருந்து கட் செய்யப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதாவது நீட் வினாத்தாள்கள் வரும் கவர்களை குறிப்பிட்ட இடத்தில் மட்டும் கட் செய்து ஓபன் செய்ய வேண்டும். ஆனால், குறிப்பிட்ட கவர் மட்டும் வேறு இடத்தில் கட் செய்யப்பட்டு இருக்கிறது.
பள்ளி மறுப்பு: அதேநேரம் இந்தச் சம்பவத்திற்கும் தங்கள் பள்ளிக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்று அந்த பள்ளியின் தலைமையாசிரியர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பள்ளிக்கு வருவதற்கு முன்பே கவரில் இருந்து நீட் வினாத்தாள் லீக் ஆகி இருக்கலாம் என்கிறார் அவர்.. தேர்வு நடக்கும் நாள் அன்று காலை தான் நீட் வினாத்தாள் பள்ளிக்கு வந்ததாகவும் அதை மாணவர்கள் முன்னிலையில் தான் ஓபன் செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகத் தெரிவித்த அவர், பள்ளி மீது எந்த தவறும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
சீலிடப்பட்ட அந்த கவரில் இருந்து வினாத்தாள்களை எப்படி எடுத்தார்கள் என்பதைக் கண்டறியும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். இதற்காகக் கைது செய்யப்பட்டோரின் மொபைல்கள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம் குறைந்தது 30 மாணவர்கள் இதில் பலனடைந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அவர்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் முயற்சியிலும் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications