அவகாசம் தரமுடியாது.. ஜன.,21க்குள் 11 பேரும் சரணடையனும்! பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: பில்கிஸ் பானு கூட்டு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததோடு அவர்களை சரணடைய உத்தரவிட்டது. இந்நிலையில் தான் குற்றவாளிகள் 3 பேர் தாங்கள் சரணடைய 4 முதல் 6 வாரம் காலஅவகாசம் வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.
குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த 2002ம் சபர்மதி ரயில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 59 இந்து யாத்திரிகர்கள் இறந்தனர். இது மதவன்முறையாக மாறியது. இதையடுத்து ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர். கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.

மேலும் பில்கிஸ் பானுவின் அவரது குடும்பத்தை சேர்ந்த 7 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் கடந்த 2008 ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வந்தனர். இந்நிலையில் தான் 14 ஆண்டுகளை தாண்டி தண்டனை அனுபவித்து உள்ளதால் தங்களை விடுதலை செய்யும்படி 11 பேரும் குஜராத் உயர்நீதிமன்றத்தை நாடினர். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றம் சென்றனர். உச்சநீதிமன்றம் குஜராத் அரசு முடிவு எடுத்து கொள்ளலாம் என கூறியது. இதையடுத்து குஜராத் பாஜக அரசு 11 பேரையும் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விடுதலை செய்தது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையே கோத்ரா கிளை சிறையில் இருந்து விடுதலையானவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இதுவும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் 11 பேரின் விடுதலையை எதிர்த்து பில்கிஸ் பானு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
அதனை விசாரித்த உச்சநீதிமன்றம் குஜராத் அரசை கடுமையாக சாடியது. குற்றவாளிகளுக்கு அரசு உடந்தையாக இருக்கிறது. அவர்களை விடுதலை செய்த விவகாரத்தில் குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அவர்கள் 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது.
மேலும் ஜனவரி 21ம் தேதிக்குள் 11 பேரும் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த 6ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை பில்கிஸ் பானு தரப்பினர் வரவேற்றனர். இந்நிலையில் தான் சரணடைய கூடுதல் காலஅவகாசம் கோரி 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர். அதன்படி 62 வயதான மிதேஷ் சிமன்லால் பட் என்பவர் தான் கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில் விவசாய அறுவடை நெருங்கிவிட்டது. இதனால் வயது முதிர்வை கவனத்தில் எடுத்து கொண்டு சரணடைய 5 முதல் 6 வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுள்ளார்.
அதேபோல் 58 வயது நிரம்பிய ரமேஷ் ரூபாபாய் சந்தனா என்பர், தற்போது உடல்நல பிரச்சனைக்கு மருந்து எடுத்து கொள்கிறேன். 86 வயது தாய் பல நோய்களால் அவதிப்படுவதால் 6 வாரம் சரணடைய அவகாசம் வேண்டும். மேலும் 55 வயது கோவிந்த்பாய் தனது 88 வயது தந்தை 75 வயது தாயை கவனிக்க நான் மட்டுமே இருக்கிறேன். இதனால் 4 வாரம் சரணடைய அவகாசம் தர வேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் இந்த மனு என்பது இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று அந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது நீதிமன்றத்தில் சரணடைய காலஅவகாசம் கோரி 3 பேரும் கூறிய காரணங்கள் போதுமானதாகவும், ஏற்றுக்கொள்ள கூடிய வகையிலும் இல்லை. இது காலஅவகாசத்தை நீட்டிப்பதற்கு தகுதியற்ற காரணங்களாக உள்ளன.
இதனால் அவர்களுக்கு சரணடைய காலஅவகாசம் என்பது வழங்க முடியாது எனக்கூறிய உச்சநீதிமன்றம் அவர்களின் மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது. அதோடு வரும் 21ம் தேதிக்குள் 11 பேரும் சிறை அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications