மாமியார்-மருமகன் காதல் கதை முடிவுக்கு வந்தது.. மகள் கடும் கோபம்.. அம்மாகிட்ட பேசமாட்டேன் என ஆத்திரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த ஒரு சம்பவம் நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. பெற்ற மகளுக்கு திருமணம் செய்து வைக்க நிச்சயம் செய்த மாப்பிள்ளையுடன், மாமியாரே ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்தில் பஞ்சாயத்து நடந்து விஷயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதேநேரம், மகள்தான் கடும் கோபத்தில் உள்ளாராம்.

அலிகாரைச் சேர்ந்த சப்னா என்பவருக்கும், ராகுல் என்பவருக்கும் இடையே இந்த காதல் கதை அரங்கேறியுள்ளது. ராகுல், சப்னாவின் மகள் அனிதாவை திருமணம் செய்ய இருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக சப்னாவும் ராகுலும் காதலித்துள்ளனர். காதல் வயப்பட்ட இருவரும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர்.

wife uttar pradesh love

இந்த விவகாரம் வெளியே தெரிந்ததும் அனிதா பேரதிர்ச்சி அடைந்தார். சொந்த தாயின் செயலால் கோபமடைந்த அனிதா, காவல் நிலையத்திற்கே சென்று தனது தாயைக் கடுமையாகச் சாடினார். குடும்ப மானம் போனதோடு, தனது வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிட்ட ஆத்திரத்தில் இருந்தார் அனிதா.

சப்னாவின் கணவர் மற்றும் உறவினர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் சப்னா கேட்கவில்லை. ராகுலுடன்தான் வாழ்வேன் என்பதில் உறுதியாக இருந்தார். இரண்டு நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. கடைசியில் சப்னாவை ராகுலுடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

தனது தாயின் இந்த செயல் தன்னை மிகவும் பாதித்திருப்பதாகவும், இனி அவருடன் எந்த உறவும் இல்லை என்றும் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார் அனிதா. திருமணத்திற்காக ராகுல் குடும்பத்திற்கு கொடுத்த சீர்வரிசை பொருட்கள், பணம் ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும் என்றும் அனிதா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மாமியாரும் மருமகனும் ஓட்டம் பிடித்த இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பெற்ற மகளின் எதிர்காலத்தை விட, தனது காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்த தாயின் செயல் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இதேபோல உ.பி.யில் மேலும் ஒரு அசிங்க சம்பவம் அரங்கேறியுள்ளது. முசாபர் நகர் மாவட்டம், ஜனசத் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட திஸ்ஸாங் கிராமத்தில் நடந்த சம்பவம். இங்கு வசிக்கும் சோனு என்பவருக்கும், ரீட்டா என்பவருக்கும் 2013-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மார்ச் 19-ஆம் தேதி மனைவி ரீட்டாவைக் காணவில்லை என சோனு போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில் ரீட்டா பக்கத்து மாவட்டமான மீரட்டில் இருப்பது தெரிய வந்தது. ஆனால், அவர் யாருடன் இருக்கிறார் என்ற உண்மை வெளிவந்தபோதுதான் சோனு நிலைகுலைந்து போனார். ரீட்டா, தனது கணவர் சோனுவின் சொந்த அண்ணன் மகன் மோனுவுடனே தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார் ரீட்டாவையும், மோனுவையும் அழைத்து வந்து விசாரித்தபோது, ரீட்டா தான் பெரியவள் என்றும், மோனுவுடனே சேர்ந்து வாழ விரும்புவதாகவும் தெரிவித்தார். சட்டப்படி இருவரும் பெரியவர்கள் என்பதால், அவர்களின் விருப்பப்படியே செல்ல போலீசார் அனுமதித்ததாகத் தெரிகிறது.

இந்த முடிவால் செய்வதறியாது திகைத்துப்போன சோனு, தற்போது முசாபர் நகர் எஸ்.எஸ்.பி.யிடம் உதவி கோரியுள்ளார். மனைவி ரீட்டா போன் செய்து தன்னை மிரட்டுவதாகவும், குழந்தைகளுக்காகவாவது திரும்பி வர வேண்டும் என்றும் கண்ணீருடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+