ஆஹா.. காங்கிரஸின் ரேவந்த் ரெட்டியை வீட்டிற்கே சென்று சந்திக்கிறார் சந்திரபாபு நாயுடு.. என்ன காரணம்!
டெல்லி: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வீட்டிற்கு நேரில் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்திக்க உள்ளார்.. இரு தலைவர்களுக்கும் இடையே நீண்ட கால நட்பு இருக்கிறது. இந்தச் சூழலில் இப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, திடீரென காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தெலுங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டியை சந்திப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் சமீபத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில், அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராகத் தேர்வானார்.

இதற்கிடையே அவர் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரு மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு தேவை என்பது சந்திரபாபு நாயுடு வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடிதம்: முன்னதாக இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு தெலுங்கானா முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஆந்திரப் பிரதேசம் பிரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது.. மறுசீரமைப்புச் சட்டத்தில் இருந்து எழும் பிரச்சினைகள் குறித்துப் பல விவாதங்கள் நடந்துள்ளன. இது நமது மாநிலங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்கத் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்தப் பிரச்சினைகளை நாம் மிகவும் இணக்கமாகத் தீர்க்க வேண்டியது அவசியம். எனவே, வரும் ஜூலை 6ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் உங்கள் இல்லத்தில் உங்களைச் சந்திக்கலாம் என இருக்கிறேன்.
நாம் நேருக்கு நேர் சந்தித்துப் பேசுவது இந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து விரிவான ஆலோசனையில் ஈடுபடும் வாய்ப்பை நமக்கு வழங்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.. மேலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்குப் பரஸ்பர நன்மைக்கு இரு தரப்பு ஒத்துழைப்பு தேவை" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்: ஆந்திராவில் இருந்து கடந்த 2014ஆம் ஆண்டில் தெலுங்கானா தனியாகப் பிரிக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும்.. இரு மாநிலங்களுக்கும் ஹைதராபாத் கூட்டுத் தலைநகராக 10 ஆண்டுகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த 10 ஆண்டுகள் இப்போது நிறைவடைந்துள்ள நிலையில், ஆந்திராவுக்கு புதிய தலைநகரை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆந்திர தலைநகராக அமராவதியை உருவாக்க சந்திரபாபு நாயுடு முடிவு செய்திருந்தார். இருப்பினும், இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி அமராவதி தொடர்பான கட்டுமானம் எதுவுமே நடக்கவில்லை. இதனால் ஆந்திர தலைநகர் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.
வாய்ப்பு: மேலும், தெலுங்கானாவில் கே சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் முழுமையாக இல்லாமல் போய்விட்டது. கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபைத் தேர்தலில் மிக மோசமான தோல்வி அடைந்த பிஆர்எஸ் கட்சி, இந்த லோக்சபா தேர்தலிலும் 3ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. எனவே சந்திரபாபு நாயுடு தெலுங்கானாவிலும் தனது கட்சியை விரிவுபடுத்தப் பார்க்கிறார். இப்போது கேசிஆர் இருப்பு இல்லாமல் போய் இருக்கும் நிலையில், இது சந்திரபாபு நாயுடுவுக்கான வாய்ப்பை கொடுத்துள்ளது.
ரேவந்த் ரெட்டி: அதேநேரம் சந்திரபாபு நாயுடு- ரேந்த் ரெட்டி இடையே ஏற்கனவே நல்லுறவு இருக்கிறது. ரேவந்த் ரெட்டி காங்கிரஸில் சேருவதற்கு முன்பு, அவர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் தான் முக்கிய தலைவராக இருந்தார். அங்கு சந்திரபாபு நாயுடுவின் நெருக்கமான சகாக்களில் ஒருவராகவும் ரேவந்த் ரெட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், ரேவந்த் ரெட்டி எப்போதும் கட்சிகளைத் தாண்டி நண்பர்களை வைத்துக் கொள்வார். சமீபத்தில் டெல்லி சென்ற போது அவர் பாஜக தேசிய தலைவர் நட்டா உட்பட மாற்றுக் கட்சியைச் சேர்ந்த பல தலைவர்களையும் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications