3 மாநிலங்களில் "முதல்வர்" நாற்காலிக்கு 'தலை'களிடையே அடிதடி- பார்வையாளர்களை களமிறக்கிய பாஜக மேலிடம்!
டெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் வெற்றி பெற்ற பாஜக முதல்வர் யார் என்பதை முடிவு செய்வதில் ரொம்பவே தடுமாறி வருகிறது. இதனையடுத்து 3 மாநிலங்களின் முதல்வர்களை தேர்வு செய்வதற்காக மேலிடப் பார்வையாளர்களை களமிறக்கியுள்ளது பாஜக.
ராஜஸ்தான் மாநிலத்தில் 199 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 115 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றியது.

ராஜஸ்தான்: ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பதவிக்கான போட்டியில் வசுந்தர ராஜே சிந்தியா, சாமியார் பாபா பாலக்நாத் உள்ளிட்டோர் உள்ளனர். தமக்கு 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாக வசுந்தர ராஜே சிந்தியா, பாஜக மேலிடத்தை மிரட்டி வருகிறார். இதனையடுத்து வசுந்தர ராஜே சிந்தியா, பாலக்நாத் ஆகியோரை டெல்லிக்கு அழைத்தது பாஜக மேலிடம். இந்த ஆலோசனைகளுக்குப் பின்னர் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களை பாஜக அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், வினோத் தவாடே, சரோஜ் பாண்டே ஆகியோர் ராஜஸ்தான் முதல்வரை தேர்ந்தெடுக்கும் மேலிடப் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ம.பி: மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 163 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்க வைத்தது. மத்திய பிரதேசத்தில் முதல்வராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தமக்குதான் முதல்வர் பதவி என்பதில் திட்டவட்டமாக உள்ளார். ஆனால் பாஜக மேலிடமோ புதுமுகம் ஒருவரை முதல்வராக்க விரும்புகிறது. டெல்லிக்கு அழைத்த போதும் சிவராஜ் சிங் சவுகான், மேலிடத் தலைவர்களை சந்திக்கவும் மறுத்துவிட்டார். இதனால் ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், கே. லக்ஷமண், ஆஷா லக்ரா ஆகியோர் அடங்கிய பார்வையாளர்களை குழுவை மத்திய பிரதேச முதல்வரை தேர்வு செய்வதற்காக பாஜக நியமித்துள்ளது.
சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 54 இடங்களில் வென்று காங்கிரஸிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் ரமண்சிங் அடம்பிடித்து நிற்கிறார். ஆனால் மத்திய அமைச்சராக இருந்த ரேணுகா சிங்குக்கு வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது. இதனையடுத்து சத்தீஸ்கர் மாநில முதல்வரை தேர்ந்தெடுக்கும் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் அர்ஜூன் முண்டா, சர்பானந்தா சோனோவா மற்றும் துஷ்யந்த் கவுதம் ஆகியோரை பாஜக நியமித்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications