ஆபரேசன் தாமரை.. பஞ்சாப் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்க பாஜக முயற்சி.. கெஜ்ரிவால் பரபர!
டெல்லி: பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 10 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை பாஜக அணுகியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி பெரும் வெற்றியை பெற்றது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை அகற்றியதோடு, டெல்லியை கடந்து ஆம் ஆத்மி தனது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்தியது.
இதன் காரணமாக குஜராத் சட்டமன்றத் தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே குஜராத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களவை கவரும் வாக்குறுதிகளை ஒவ்வொரு கட்டமாக அறிவித்து வருகிறார்.

குஜராத் தேர்தல்
அதேபோல் குஜராத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் பாஜகவில் ஐக்கியமாகி வருவதால், காங்கிரஸ் கட்சியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனிடையே அண்மைக் காலமாக ஆபரேசன் தாமரை என்ற பெயரில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ-க்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

கோவா காங்கிரஸ்
அண்மையில் கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எம்எல்ஏ-க்கள் பாஜகவுக்கு தாவினர். சில மாநிலங்கள் கட்சிகளை பிரிந்து பாஜக ஆட்சி அமைத்து வந்தது. ஏன் இன்று கூட கோவாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 8 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். ஆனால் பாஜகவின் கணக்கு பீகார் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் தோல்வியடைந்தது. டெல்லியில் ஆம் ஆத்மியைச் சேர்ந்த 20 எம்எல்ஏ-க்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக அம்மாநில சட்டமன்றத்திலேயே முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.

அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
இந்த நிலையில் பாஜக மீண்டும் ஆபரேசன் தாமரையை பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்த முயற்சித்து வருவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், பஞ்சாப் மாநிலத்தில் 10 ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை பாஜக அணுகியுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்கி, அரசாங்கங்களை கவிழ்ப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

பஞ்சாப் நிதியமைச்சர்
முன்னதாக பஞ்சாப் மாநில நிதி அமைச்சர் ஹர்பால்சிங் சீமா கூறுகையில், ஆபரேஷன் தாமரை திட்டத்தை பஞ்சாப்பில் செயல்படுத்த பாஜக சதித் திட்டம் தீட்டியுள்ளதாகவும், ஒரு எம்எல்ஏ-வுக்கு ரூ.20 கோடி வரை பேரம் பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications