வித்தியாசத்தை கவனிச்சீங்களா! தர்மயுத்த நாயகனை கழற்றிவிட்டதா தாமரை தலைமை?
டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஜெகதீப் தங்கர் வேட்புமனுத் தாக்கலின்போது எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த தம்பிதுரை உடன் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் தரப்பினர் யாரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது.
இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்பட்டு உள்ளார்.

வேட்புமனுத் தாக்கல்
அதேபோல் எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மார்கரெட் ஆல்வா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதி நிறைவடைய உள்ளது. இதனை தொடர்ந்து இன்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், மத்திய வேளாந்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்ளிட்டோர் இந்த வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர்.

தம்பிதுரை, ஜி.கே.வாசன்
அவர்களுடன் கூட்டணி கட்சியான இந்திய குடியரசு கட்சி (ஏ) வின் தலைவரும் மத்திய சமூக நலத்துறை இணை அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே, அதிமுக மூத்த தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் இந்த வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர். ஆனால், இதில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை.

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு இல்லை
இதற்கு முன்பாக குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமெடுத்ததை தொடர்ந்து எடப்பாடி தரப்பில் தம்புதுரையையும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அவரையும் அவரது மகன் ரவீந்திரநாத்தையும் அழைத்திருந்தது பாஜக தலைமை. அப்போது பாஜகவை முழுமையாக நம்பி இருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.

பாஜக நிலைபாடு
ஆனால், கடந்த 11 ஆம் தேதி அதிமுகவின் பொதுக்குழுவில் கட்சியின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டு ஓ.பன்னீர்செல்வம் அவரது மகன்கள், ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலையோ எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். தற்போது இந்த வேட்புமனு தாக்கல் நிகழ்வுக்கு ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அழைக்கப்படாது அதிமுக இரட்டைத் தலைமை விவகாரத்தில் பாஜகவின் நிலைபாட்டை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications