"இயேசு மட்டும் தான் கடவுள்.. சக்தி மாதிரில்லாம் இல்லை!" ராகுலிடம் சொன்ன ஜார்ஜ் பொன்னையா.. பாஜக கோபம்
டெல்லி: பாத யாத்திரை மேற்கொண்டிருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், கடவுள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதில் அளித்த ஜார்ஜ் பொன்னையாவுக்கு கண்டனம் தெரிவித்து பாஜக செய்தி தொடர்பாளர் டுவிட் பதிவு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் நடத்த தேர்தல்களில் தோல்வி மற்றும் பல முக்கிய தலைவர்கள் கட்சியில் இருந்து விலகி சென்றது போன்ற காரணங்களால் காங்கிரஸ் கட்சி கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
இதனால் ஆளும் பாஜகவுக்கு எதிராக பல்வேறு மாநில கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பாஜக, காங்கிரசுக்கு அடுத்தப்படியாக 3-வது அணி அமைக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருக்கின்றன.

'பாரத் ஜோடோ யாத்ரா'
இந்த பரபரப்பான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கிய அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

பரவும் வீடியோ
இந்நிலையில் நடைபயணத்தின் போது, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஏசு கடவுளா? இல்லை கடவுளின் மகனா? என்பது குறித்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுடன் நடத்திய உரையாடல் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ''ராகுல் காந்தி தனது நடை பயணத்தின் ஒரு பகுதியாக கிறிஸ்தவ பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உள்ளிட்ட சிலருடன் பேசுகிறார். அதில், இயேசு கடவுளா என ராகுல் காந்தி கேட்டார்! அதற்கு சார்ஜ் பொன்னையா இயேசு கடவுள்தான் என கூறுகிறார்.

ஜார்ஜ் பொன்னையா பதில்
கடவுளின் உருவமா அல்லது கடவுளின் குழந்தையா என கேட்க... கடவுளின் உருவம் எனறோ, கடவுளின் குழந்தை என்றோ இயேசு கிறிஸ்துவை சொல்ல முடியாது அவர் அனைத்தும் சேர்ந்தவர். சாதாரணமானவர்களைப் போல மனிதன் மனிதன் இணைந்து இயேசு பிறக்கவில்லை. அவர் கடவுளின் உருவமும் கிடையாது. அவர்தான் கடவுள் என பாதிரியார் கூறினார். கூட அமர்ந்திருந்த இன்னொருவர், தண்ணீரை உதாரணமாக வைத்து இயேசு எப்படிப்பட்டவர் தெரியுமா என விளக்கம் கொடுத்தார். தற்போது இந்த வீடியோ காட்சி வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், ஜார்ஜ் பொன்னையா, இயேசுவை மட்டுமே விளக்காமல், கூடவே, அது சக்தி மாதிரியெல்லாம் கிடையாது. அவர்தான் முழு கடவுள் என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சக்தி என்பது பராசக்தியின் வடிவம் என்பதும், தென் மாவட்டங்கள் பலவற்றில் சக்தி வழிபாடு உள்ளது, அதிலும் குறிப்பாக, சக்தி கோயில்கள் என்றே சில அம்மன் கோயில்கள் அழைக்கப்படுவது உண்டு. பிரம்ம சக்தி அம்மன் என்றும் வழிபடுகிறார்கள். எனவேதான், சக்தி மாதிரி இல்லை என்று ஜார்ஜ் பொன்னையா ஒப்புமை செய்தது மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டனம்
ஜார்ஜ் பொன்னையா ஏற்கனவே மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசி சிறை சென்று வந்தவர் என்றும், அவரை ஏன் ராகுல் காந்தி சந்தித்து பேச வேண்டும் என்றும் ஒரு சிலர் கேள்வி மற்றும் கண்டனம் தெரிவிவித்து வருகின்றனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் சிறுபான்மை மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில் ராகுல் காந்தி பாதியார்களை சந்தித்து பேசுவது அவர்களுக்கு நம்பிக்கை அளிப்பதாக கூறி வருகின்றனர்.

ஏற்கனவே சிறை சென்றவர்
இவ்வாறு இந்த விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், இந்த சம்பவத்துக்கு பாஜனதா கடும் கண்டம் தெரிவித்துள்ளது. இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ''ராகுல் காந்தியை சந்தித்து பெசிய ஜார்ஜ் பொன்னையா, சக்தி (மற்றும் பிற கடவுள்கள்)போல் அல்லாமல் இயேசு மட்டுமே கடவுள் என்று கூறுகிறார். மேலும், பாரத மாதாவின் அசுத்தங்கள் நம்மை மாசுபடுத்தக்கூடாது என்பதற்காக அவர் காலணிகளை அணிவதாகவும் கூறுகிறார். ஜார்ஜ் பொன்னையா இதுபோன்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்'' இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார் .
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications