6 இந்தி பேசும் மாநிலங்களில் 75 தொகுதிகளை பறிகொடுக்குமாம் பாஜக!
டெல்லி: இந்தி மொழி பேசும் 6 மாநிலங்களில் 75 லோக்சபா தொகுதிகளை இம்முறை பாஜக இழக்க நேரிடும் என தி வயர் இணையதளம் தெரிவித்துள்ளது.
தி வயர் இணையதளம் வெளியிட்டுள்ள கட்டுரை:

இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக பின்னடைவு சந்திக்கும் என்பது பொதுவாக அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. அண்மையில் உத்தரப்பிரதேசத்தில் வாக்குப் பதிவுகளை முன்வைத்து வெளியிடப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக 40 தொகுதிகளை அம்மாநிலத்தில் இழக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் இந்தி பேசும் மாநிலங்களான பீகார், சத்தீஸ்கர், ராஜஸ்தான், டெல்லி, ஹிமாச்சல் பிரதேசம், ஹரியானா, ஜார்க்கனண்ட், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட்டிலும் கருத்து கணிப்புகள் எடுக்கப்பட்டன. இந்த 10 மாநிலங்களில் கடந்த 2 ஆண்டுகளில் 6 மாநிலங்கள் சட்டசபை தேர்தல்களை எதிர்கொண்டன.
சத்தீஸ்கர், ஹிமாச்சல், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகியவை தேர்தலை எதிர்கொண்டன. இந்த மாநிலங்களில் மொத்தம் 154 லோக்சபா தொகுதிகள் உள்ளன. 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதில் 142 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. அதாவது பாஜக வென்ற மொத்தம் 283-ல் 50% தொகுதிகளை இந்த 6 மாநிலங்கள்தான் அள்ளி கொடுத்தன.
அண்மைய சட்டசபை தேர்தல்களை கணக்கில் வைத்துப் பார்த்தால் பாஜ்க மொத்தம் 75 தொகுதிகளில் தோல்வியைத் தழுவும் நிலை உள்ளது. அதுவும் உத்தரப்பிரதேசத்தில் பெரிய அளவுக்கு தோல்வியைத் தழுவும். அதே நேரத்தில் ஹிமாச்சல் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய சிறிய மாநிலங்கள் பாஜகவுக்கு ஆறுதல் தரக் கூடியனவாக இருக்கும்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 3% என குறைந்தாலே தோல்வி அடையும் தொகுதிகள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி- அகிலேஷ் அமைத்திருக்கும் மெகா கூட்டணிக்கான ஆதரவு அப்படி உள்ளது.
இந்தி பேசும் மாநிலங்களில் பாஜக வெற்றி பெறக் கூடிய தொகுதிகள் எண்ணிக்கை:
உத்தரப்பிரதேசம்- 27 (2014-ல் 71)
மத்திய பிரதேசம் 17 ((2014-ல் 27)
ராஜஸ்தான் 13 (2014-ல் 25)
சத்தீஸ்கர் 1 (2014-ல் 10)
உத்தரகாண்ட் 5 (2014-ல் 5)
ஹிமாச்சல் 4 (2014-ல் 4)
இவ்வாறு தி வயர் இணையதளத்தின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக்












Click it and Unblock the Notifications