"ராகுலை உடனே சஸ்பெண்ட் பண்ணுங்க.." புகார் பட்டியலுடன் ஆவேசம் காட்டும் பாஜக! அடுத்து என்ன! பரபர
ராகுல் காந்தி லண்டனில் பேசியது குறித்து பாஜக தொடர்ந்து எதிர்வினையாற்றி வருகிறது.
டெல்லி: காங்கிரஸின் ராகுல் காந்தி லண்டனில் இந்திய ஜனநாயகத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாகவும் அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும் பாஜக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தியாவில் கடந்த பிப். 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் இரு அமர்வுகளாக நடைபெறுகிறது.
முதல் அமர்வு முடிந்துள்ள நிலையில், இரண்டாம் அமர்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி விவகாரத்தை ஆளும் பாஜக தரப்பு எம்பிகள் கையில் எடுத்துள்ளனர்.

ராகுல் காந்தி
அதாவது, லண்டன் சென்ற ராகுல் காந்தி அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன் நாடாளுமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர். அப்போது அங்கு ராகுல் காந்தி சொன்ன கருத்துகள் இந்தியாவை அவமதிக்கும் வகையில் இருப்பதாக பாஜக தொடர்ந்து சாடி வருகிறது. ராகுல் காந்தி லண்டனில் பேசியது இந்தியாவின் ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் என்றும், இதற்காக ராகுல் காந்தி மக்களவையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

சஸ்பெண்ட்
அப்படி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கவில்லை என்றால்... அவரை மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றும் இது குறித்து விசாரிக்கக் குழு அமைக்க வேண்டும் என்றும் பாஜக எம்பிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து பாஜக எம்பிகள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். முன்னதாக ராகுல் காந்தி, தனது பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கத் தன்னை அனுமதிக்குமாறு ராகுல் காந்தி நேற்று வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நிஷிகாந்த் துபே
இது குறித்து பாஜக எம்பி நிஷிகாந்த் துபே கூறுகையில், "ராகுல் காந்தி கூறிய அவமதிப்பு கருத்துகள் குறித்து விசாரிக்க, அலுவல் நடத்தை விதி 223இன் கீழ் சிறப்பு நாடாளுமன்றக் குழுவை அமைக்க வேண்டும்.. நாட்டின் உயர் நிறுவனங்களின் மரியாதையை யாரும் இதுபோல அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.. இந்த விவகாரத்தில் ராகுல் காந்தியை சபையில் இருந்து இடைநீக்கம் செய்ய வேண்டுமா என்பதை இந்த குழு பரிசீலிக்க வேண்டும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக 2008இல் குழு அமைத்ததை போலவே இப்போதும் குழு அமைக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லி போலீஸ்
ராகுல் காந்தி இந்திய நாடாளுமன்றத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் இந்தியாவிற்கு எதிரான பிரசாரம் செய்து ஜனநாயகத்தை இழிவுபடுத்தியதாகச் சாடியிருந்தார். இருப்பினும், காங்கிரஸ் இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளது. ராகுல் தவறாக எந்தவொரு கருத்தையும் சொல்லவில்லை என்றே காங்கிரஸ் கூறி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, பாரத் ஜோடோ யாத்திரையின் போது பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானவர்கள் குறித்த விவரங்களைப் பகிர்ந்தாக சொல்லி ராகுல் காந்தியிடம் விசாரிக்க வேண்டும் என்று டெல்லி போலீசார் நோட்டீசும் அனுப்பியுள்ளது.

பதிலடி
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ், "பிரதமர் (நரேந்திர) மோடி மற்றும் அதானியின் உறவு குறித்த ராகுல் காந்தியின் கேள்விகளால் திணறிய இந்த அரசு, காவல்துறைக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 45 நாட்களுக்குப் பிறகு, டெல்லி போலீஸ் நோட்டீஸ் மூலம், ராகுலை சந்தித்த பெண்களின் விவரங்களையும், அவர்கள் சந்தித்த துன்புறுத்தல்கள் மற்றும் வன்முறைகள் குறித்தும் கேட்டுள்ளது.. இந்த நோட்டீசுக்கு சட்டப்படி உரிய நேரத்தில் பதில் அளிப்போம்" என்று பதிலடி கொடுத்துள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications