என்னால அதை நேரில் பார்க்க முடியாதே.. மோடியின் மனைவி யசோதா வருத்தம்
டெல்லி: இவங்கள கூப்பிடல, அவங்கள கூப்பிடல என்று கட்சிகள் சலசலத்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மனைவி யதோதாவையே பதவி ஏற்பு விழாவுக்கு கூப்பிடலையாம்!
பிரதமர் மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது, 2014 ஆம் ஆண்டு, தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்த படிவத்தில், தன்னை திருமணம் ஆனவர் என்றும், மனைவி பெயர் யசோதா என்றும் சொல்லி இருந்தார்.
அதேபோல இப்போது நடந்து முடிந்த தேர்தலின்போதும், படிவத்தில் கல்யாணம் ஆனவர், என்றுதான் சொல்லி இருந்தார். வடக்கு குஜராத்தின் பிரம்மவாடா பகுதியில்தான் யசோதா பிறந்தார். 1968ஆம் ஆண்டு மோடியை கல்யாணம் செய்துள்ளார்.

மோடி மனைவி
இப்போதுகூட அதே கிராமத்தில், தனது தம்பியுடன் வசித்து வருகிறார். ஒரு ஸ்கூலில் டீச்சராக வேலை பார்த்தவர். இதில் ஒரு முக்கியமான விஷயம் என்னன்னா, இவர்தான் மோடி மனைவி என்று அந்த ஊர்க்காரர்கள் நிறைய பேருக்கு தெரியாதாம்.

குஜராத் முதல்வர்
2014ஆம் ஆண்டு, பிபிசிக்கு யசோதா ஒரு பேட்டி தந்திருக்கிறார். அதில், "கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான் என்னோடு மோடி இருந்தார், வேலை விஷயமா போறேன்னு வெளியே போனவர், அதுக்கப்புறம் திரும்பவே இல்லை, ரெண்டு பேரும் பேசிக் கொள்ளவும் இல்லை. குஜராத் முதல்வரா பதவி ஏற்றபோது மட்டும் அவர்கிட்ட பேசணும்னு எண்ணம் இருந்தது. ஆனா அதுக்கு நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை" என்று சொல்லி இருந்தார்.

மனம் திறந்த யசோதா
இதுபோல பல முக்கிய தருணங்களை இதே பிபிசியிடம் யசோதா மனம்திறந்து சொல்லி உள்ளார். எனினும் மீடியாக்களில் பேசுவதை தவிர்த்து வருகிறார். இந்நிலையில், மோடி இன்று 2-வது முறையாக பிரதமர் ஆகிறார். திரும்பவும் பிபிசி யசோதாவை சந்தித்து பேட்டி கண்டுள்ளது. அப்போது அவர் சொன்னதாவது:

அழைப்பு இல்லை
"சூரத் மாநகராட்சியால் இன்று மாலை பள்ளிக் குழந்தைகளுக்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார்கள். அதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறேன். அதனால் பதவியேற்பு விழாவை நேரலையில் என்னால் பார்க்க முடியாது" என்றார். ஆனால் விழாவுக்கு அழைப்பும் ஏதும் வரவில்லை என்று யசோதாவின் தம்பி அசோக் மோடி தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications