தேர்தல் பத்திர நிதி.. சுளையாக ரூ.1,294 கோடியை அள்ளிய பாஜக! காங்கிரஸ் கட்சியை விட 7 மடங்கு அதிகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2022-2023ஆம் ஆண்டில் தேர்தல் பத்திரங்கள் மூலம் சுமார் ரூ.1,300 கோடி நிதி பெற்றுள்ளது பாஜக. அதேநேரம், காங்கிரஸ் கட்சி தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.171 கோடி நன்கொடை பெற்றுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் என்பது, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகளை வழங்குவதற்கான ஒரு வழிமுறை. இது ஒரு உறுதிமொழிப் பத்திரம் போன்றது. கடந்த 2017-18ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் தேர்தல் பத்திரம் திட்டம் அறிவிக்கப்பட்டு, 29 ஜனவரி 2018 அன்று மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கி மூலம் தேர்தல் பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

BJP got 1294 crore through electoral bonds in one year which was seven times more than that of Congress

இந்தத் தேர்தல் பத்திரங்களை வாங்குபவரின் பெயர், முகவரி, இந்த நிதி யாரிடம் இருந்து பெறப்பட்டது ஆகிய விவரங்கள் மற்றவர்களுக்குத் தெரியாது. தனிநபரோ அல்லது கார்ப்பரேட் நிறுவனமோ இந்தப் பத்திரங்களைக் கொண்டு தங்களுக்கு விருப்பமான கட்சிகளுக்குத் தேர்தல் நிதி வழங்கலாம். அதனை அரசியல் கட்சிகள் 15 நாட்களுக்குள் நிதியாக மாற்றிக்கொள்ளலாம். இல்லையென்றால், அந்தத் தேர்தல் பத்திரத் தொகை பிரதமர் நிவாரண நிதியில் சேர்க்கப்படும்.

பொதுவாக தேர்தல்பத்திரங்கள் ஜனவரி, ஏப்ரல், ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 10 நாட்களுக்குக் கிடைக்கும். பொதுத் தேர்தல் காலகட்டத்தில் கூடுதலாக 30 நாட்களுக்கு தேர்தல் பத்திரங்களை விற்பனை செய்ய மத்திய அரசால் அனுமதி வழங்கப்படும். இந்த தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை விற்பனையான மொத்த தேர்தல் பத்திரங்களில் 55 சதவீதம் பாஜகவுக்குச் சென்றுள்ளது. ரூ.12,008 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் இதுவரை விற்றுள்ள நிலையில், அதில், 55% அதாவது ரூ.6,564 கோடி பாஜகவுக்கு கிடைத்துள்ளது.

2022-23ஆம் ஆண்டில் மட்டும் ரூ.2,800 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.1,294 கோடி பாஜகவுக்கு கிடைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதே 2022-23 நிதியாண்டில் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.171 கோடி மட்டுமே கிடைத்துள்ளது.

2022-2023 நிதியாண்டில் பாஜகவுக்கு கிடைத்த மொத்த நன்கொடை நிதி ரூ.2,120 கோடி. இதில் 61% தேர்தல் பத்திரங்களில் இருந்து வந்தவை என்று தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் வருடாந்திர தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியான அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, 2021-22ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ₹3.2 கோடி சம்பாதித்தது. ஆனால், 2022-23ல், தேர்தல் பத்திரங்களிலிருந்து அக்கட்சிக்கு எந்தப் பங்களிப்பும் இல்லை. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி, (TDP) 2022-23ல் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.34 கோடி சம்பாதித்தது, இது முந்தைய நிதியாண்டை விட 10 மடங்கு அதிகமாகும்.

தேர்தல் மற்றும் பொதுப் பிரச்சாரத்துக்கான மொத்தச் செலவில், விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த பாஜக ரூ.78.2 கோடியை செலுத்தியுள்ளது. இது 2021-22ல் ரூ.117.4 கோடியாக இருந்தது. பாஜக, வேட்பாளர்களுக்கு நிதி உதவியாக ரூ.76.5 கோடியை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+