அதானி விவகாரம்.. யாரை பார்த்தும் பாஜக பயப்பட வேண்டியதில்லை.. அமித் ஷா 'சுளீர்'
"மோசடி குறித்தும், முறைகேடு குறித்தும் பேசுவதற்குக் காங்கிரஸுக்கும், ராகுல் காந்திக்கும் என்ன தகுதி இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியின் போது ரூ.12 லட்சம் கோடி அளவில் முறைகேடு நடந்தது"
டெல்லி: அதானி விவகாரத்தில் யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
"எப்பொழுதெல்லாம் பிரதமர் நரேந்திர மோடி மீது எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி இரைக்கிறார்களோ, அப்பொழுதெல்லாம் அசுர பலத்துடன் மோடி வெற்றி பெறுவது வரலாறு" என்றும் அவர் கூறினார்.
அதானி மீது 'ஹிண்டென்பர்க்' நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், அமித் ஷா இவ்வாறு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

புயலை கிளப்பிய அதானி விவகாரம்
தொழிலதிபர் அதானி பங்குச்சந்தைகளிலும், முதலீடுகளிலும் பல்வேறு மோசடிகளை செய்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டென்பர்க் நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட்டனர். குறிப்பாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்த விவகாரத்தைத் தீவிரமாக கையில் எடுத்துள்ளார். அதானி விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாகக் குற்றம்சாட்டி ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"மோடியின் கைகள் நடுங்குகின்றன"
ராகுலின் இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸை பாஜக எம்.பி.க்கள் வழங்கியுள்ளனர். இதனிடையே, தனது சொந்த தொகுதியான வயநாட்டில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் நான் பேசும் போது மோடியின் கைகள் நடுங்கின" எனக் கூறினார். ராகுலின் இந்த பேச்சு பாஜகவினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அமித் ஷா ஆவேசம்
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் நேற்று பேட்டி கண்டது. அப்போது அதானி விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "அதானி விவகாரத்தை உச்ச நீதிமன்றம் கவனித்து வருகிறது. இந்த நேரத்தில் அதைப் பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது. அதே சமயத்தில், இந்த விவகாரத்தில் பாஜகவிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. அதேபோல, இந்த விஷயத்தில் யாரையும் கண்டும் பயப்பட வேண்டிய அவசியமும் பாஜகவுக்கு இல்லை" என்றார்.

"நீதிமன்றத்துக்குப் போக வேண்டியதுதானே"
இதையடுத்து, அதானி விவகாரத்தில் பாஜகவை ராகுல் காந்தி குற்றச்சாட்டி பேசுகிறாரே என நெறியாளர் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமித் ஷா, "மோசடி குறித்தும், முறைகேடு குறித்தும் பேசுவதற்குக் காங்கிரஸுக்கும், ராகுல் காந்திக்கும் என்ன தகுதி இருக்கிறது? காங்கிரஸ் ஆட்சியின் போது ரூ.12 லட்சம் கோடி அளவில் முறைகேடு நடந்தது. ஆனால், பாஜக ஆட்சியில் ஒரு மோசடி கூட நடைபெறவில்லை. அதனால் விரக்தியில் காங்கிரஸார் இவ்வாறு பேசுகின்றனர். அதானி விவகாரத்தில் மத்திய அரசு தவறிழைத்திருந்தால், அவர்கள் (காங்கிரஸ்) நீதிமன்றத்துக்குப் போகலாமே.. யார் அவர்களைத் தடுத்தது? நீதிமன்றம் என்ன பாஜகவின் கட்டுப்பாட்டிலா இருக்கிறது?

"வரலாற்றைப் பாருங்கள்"
பாஜகவுக்கு எதிராகவும், நரேந்திர மோடிக்கு எதிராகவும் சதி நடப்பது இது ஒன்றும் புதிதல்ல. 2002-ம் ஆண்டு முதலே மோடிக்கு எதிராக மிகப்பெரிய சதிகளை எதிர்க்கட்சிகள் செய்தன. ஆனால் என்ன நடந்தது? எப்போதெல்லாம் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சேற்றை வாரி இரைக்கிறார்களோ, அப்போதெல்லாம் அசுர பலத்துடன் மோடி வெற்றி பெறுவதுதான் வரலாறு. ஆயிரம் சதி செய்தாலும் உண்மையை என்றைக்கும் மறைக்க முடியாது. உண்மை சூரியனைப் போன்றது. அது பிரகாசமாக எரிந்து கொண்டே இருக்கும்" என அமித் ஷா கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications