ஈ, காக்கை கூட இல்லை.. வெறிச்சோடியது டெல்லி பாஜக தலைமையகம்!
டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது.
டெல்லி: அப்படி ஒரு "டல்" அடிக்கிறது பாஜக தலைமை ஆபீஸ்!
புதுடெல்லியில் 6 ஏ, தீன்தயாள் உபாத்யா மார்கில் தான் பாஜக தலைமை அலுவலகம் உள்ளது. மோடி பதவிக்கு வந்த நாளில் இருந்தே இந்த அலுவலகத்தில் அப்படி ஒரு கூட்டம் வழிந்து நிறையும்.
எங்கெங்கிருந்தோ பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் கிளம்பி இங்கு வந்து விடுவார்கள். அதுவும் தேர்தல் சமயங்களில் சொல்ல வேண்டாம். விடிகாலையிலேயே லைன் கட்டி நிற்பார்கள்.

ஆரவாரம்
மோடி ஆட்சியின்போதே நிறைய மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது. அப்போது ஆஹா ஓஹோவென வெற்றி இல்லாவிட்டாலும் ஓரளவு வெற்றியை பெற்று ஜஸ்ட் பாஸ் ஆனது. ஆனால் இதற்கே பாஜக தொண்டர்கள் தலைமை அலுவலகம் முன்பு கூடி நின்று ஆரவாரம் செய்வார்கள்.

நிசப்தம்
இன்னைக்கு நிலைமை அப்படி இல்லை. தலைமை அலுவலகமே வெறிச்சோடி இருக்கிறது. பட்டாசு சத்தம் இல்லை, முழக்கங்கள் இல்லை, பெரிய அளவில் தொண்டர்கள் படையும் இல்லாமல் நிசப்தமாக உள்ளது.

தமிழக பாஜக அலுவலகம்
கட்சி தலைவர்கள் எல்லாம் ஒருபுறம் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தாலும், தொண்டர்கள் இல்லாதது தலைமை அலுவலகம் களை இழந்தே காணப்படுகிறது. டெல்லி தலைமை ஆபீஸே இப்படி என்றால் தி.நகரில் உள்ள தமிழக பாஜக அலுவலகம் இன்னும் மோசம். பெயருக்கு கூட ஒரு ஆளை காணோம்.

சத்திய மூர்த்தி பவன்
ஆனால் இதற்கு நேர் எதிராக இருக்கிறது சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகம். சத்திய மூர்த்தி பவன் வெளிப்புறம் பார்க்கவே களை கட்டுகிறது. காங்கிரஸ் கரைவேட்டி தலைகள் எக்கச்சக்கமாக காலையிலேயே குவிந்து விட்டனர். ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக வெளியாக அனைவர் முகத்திலும் பூரிப்பு.

பளிச் - திருநாவுக்கரசர்
இன்னும் கொஞ்சம் நேரம் ஆனதும் பட்டாசே வெடிக்க ஆரம்பித்து விட்டனர். திருநாவுக்கரசர் வெள்ளை வேட்டி சட்டை, கூலிங் கிளாஸ் சகிதம் பளிச்சென வந்தார். சத்திய மூர்த்தி பவன் வாசப்படியிலேயே பட்டாசுகளை நிர்வாகிகள் கொளுத்த அதனை அருகில் நின்று ரசித்து பார்த்தார் திருநாவுக்கரசர்.
-
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications