வேட்டையன் பாஜக! மோடி மட்டும்தான் கிங்! குறுநில மன்னர்கள் காலி! முகம் தெரியாதவர்கள் முதல்வரான பின்னணி
டெல்லி: 3 மாநிலங்களில் முகம் தெரியாதவர்களை முதலமைச்சர்களாக பாஜக தலைமை அறிவித்து இருப்பதன் பின்னணி என்ன என்று விரிவாக பார்ப்போம்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றது. டிசம்பர் 3 ஆம் தேதி ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகின. மிசோரம் மாநிலத்துக்கு டிசம்பர் 4 ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக வென்றது. தெலுங்கானாவில் காங்கிரஸும், மிசோரத்தில் ZPM கட்சியும் வெற்றிபெற்றன.

இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற 3 மாநிலங்களான ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகியவற்றில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்றே கட்சித் தலைமை அறிவிக்காமல் போட்டியிட்டது. அதேபோன்று பாஜக எம்பிக்களை வைத்து பிரச்சாரம் மட்டும் செய்யாமல், மக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்ட எம்பிக்களை போட்டியிட வைத்தது. தேர்தலில் போட்டிபோட்ட மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக எம்பிக்கள் 12 பேரில் 10 பேர் வெற்றிபெற்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் படேல், ரித்தி பதக், ராக்கேஷ் சிங், உதய் பிரதாப் சிங் ஆகியோர் சபாநாயகரை சந்தித்தனர். அதேபோன்று ராஜஸ்தானில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர், கிரோடி லால் மீனா மற்றும் தியா குமாரி ஆகியோரும், சத்தீஸ்கரில் இருந்து அருண் சாவ் மற்றும் கோமதி சாய் உள்ளிட்டோர் வெற்றிபெற்றனர். இவர்கள் எம்பி பதவியில் இருந்து ராஜினாமா செய்த நிலையில், அவர்களே மாநில முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்படுவார்கள் என்று பேசப்பட்டது.
அதேபோன்று 3 மாநிலங்களில் முதலமைச்சர்களாக பதவி வகித்தவர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படலாம் என்று கூறப்பட்டன. இந்த 3 மாநிலங்களுடன் தேர்தலை எதிர்கொண்ட தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் பதவியேற்பு விழாவே நடந்து முடிந்துவிட்ட நிலையில், பாஜக முதலமைச்சரே யார் என்று முடிவு செய்யாததால் 3 மாநிலங்களில் கட்சிக்குள் குழப்பங்களும் ஏற்பட்டன. இந்த நிலையில் அனைத்து கணிப்புகளையும் தகர்த்து முகம் தெரியாத 3 பேருக்கு 3 மாநிலங்களிலும் முதலமைச்சர் பதவியை வழங்கி உள்ளது பாஜக.
சத்தீஸ்கரில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த விஷ்ணு தியோ சாய், மத்திய பிரதேசத்தில் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மோகன் யாதவ், ராஜஸ்தானில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பஜன்லால் ஷர்மா ஆகியோரை நியமித்து, சாதி பாகுபாடு பார்க்காத கட்சி என்ற தோற்றத்தை நிறுவ முயற்சித்து இருக்கிறது. இதை விட முக்கியமான விசயம், மாநிலங்களில் வலுவான தலைவர்களாக குறுநில மன்னர்கள்போல் இருந்த பாஜக தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்களை காலி செய்துள்ளது பாஜக.
இதே வேலையை கர்நாடகாவில் பாஜக தலைமை செய்ய முயற்சித்து பெரும் அடியை தேர்தலில் சந்தித்தது. எனவே அவரை மகனையே மாநில தலைவராக அக்கட்சி அறிவித்து உள்ளது. ஆனால், வட இந்தியாவில் நிலவரம் வேறாக இருக்கும் என்பதை உணர்ந்த பாஜக தலைமை, இந்த 3 மாநில தேர்தல்களில் முன்னாள் முதலமைச்சர்களை தேர்தல் வரை நன்றாக பயன்படுத்திக்கொண்டு கழற்றிவிட்டு முகமறியாதவர்களை முதலமைச்சராக்கி உள்ளது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மோடி என்ற ஒற்றை மனிதன் தான் எல்லாம் என்பதை வட மாநில மக்கள் மனதில் ஆழப்பதிய வைக்கும் வகையில் இந்த நகர்வை அக்கட்சி எடுத்துள்ளது.
-
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
இந்தியா மட்டுமல்ல.. ஒட்டு மொத்த தெற்கு ஆசியாவுக்கும் குரல் கொடுத்த மோடி! ஜி7 மாநாட்டில் மாஸ் பேச்சு! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications