டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாஜகதான் சமூக நீதிக்கான கட்சி.. தலித் மக்களுக்கான கட்சி.. திருப்பூரில் மோடி முழக்கம்!

இந்தியாவில் பாஜகதான் சமூக நீதிக்கான கட்சி என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக்கிறார்.

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் பாஜகதான் சமூக நீதிக்கான கட்சி என்று பிரதமர் மோடி திருப்பூரில் பேசி இருக்கிறார்.

பிரதமர் மோடி இன்று மாலை தமிழகம் வந்தார். தமிழகம் வந்த அவர் திருப்பூரில் பாஜக சார்பாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பேசினார்.

சுமார் 45 நிமிடங்கள் அவர் பொதுக்கூட்டத்தில் பேசினார். எதிர்க்கட்சிகள் குறித்து அவர் இதில் கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

தமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும்.. திருப்பூரில் பிரதமர் மோடி வாக்குறுதி! தமிழகத்தில் விரைவில் பாதுகாப்பு தளவாடம் அமைக்கப்படும்.. திருப்பூரில் பிரதமர் மோடி வாக்குறுதி!

காங்கிரஸ் பயம்

காங்கிரஸ் பயம்

மோடி தனது பேச்சில், எதிர்க்கட்சியினர் பாஜகவை பார்த்து பயப்படுகிறார்கள்.அதனால்தான் அவர்கள் ஒன்றாக பெரிய கூட்டணி வைத்து உள்ளனர். அவர்களுக்கு கொள்கை எதுவும் கிடையாது. மோடியை தோற்க அடிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கை .தேர்தல் வந்தால் எதிர்க்கட்சியினர் தோல்வி அடைந்துவிடுவார்கள்.

தேர்தல் வந்தவுடன்

தேர்தல் வந்தவுடன்

தேர்தல் வந்தவுடன் காங்கிரஸ் கடன் தள்ளுபடி பற்றி பேசுகிறது. இதன்முலம் விவசாயிகள் உண்மையில் பலன் பெற மாட்டார்கள். ஆனால் நாங்கள் விவசாயிகளுக்கு பல திட்டங்கள் கொண்டு வந்து இருக்கிறோம்.எந்த திட்டமிடலும் இன்றி எதிர்க்கட்சியினர் பேசி வருகிறார்கள்.

கடன் தள்ளுபடி

கடன் தள்ளுபடி

கடனை தள்ளுபடி செய்தால் மக்கள் பலன் பெற மாட்டார்கள். சமூக நீதிதான் பாஜகவின் குறிக்கோள்.சமூக நீதிக்காக பாடுபட்ட ஒரே கட்சி பாஜகதான். எஸ்சி, எஸ்டி மக்களின் நலனை பாதுகாக்க நாங்கள்தான் சட்டம் கொண்டு வந்தோம்.

திருக்குறள்

திருக்குறள்

நாடு முன்னேறட்டும், மக்கள் முன்னேறட்டும், என்று கூறி வணக்கம், என்று தமிழில் பேச்சை முடித்தார் பிரதமர் மோடி. திருவள்ளுவரின் குறளை கூறி பேச்சை முடித்தார் பிரதமர் மோடி.

''வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு.''

என்ற குறளை ஆங்கிலத்தில் குறிப்பிட்டார் பிரதமர் மோடி.

English summary
BJP is the only party in India for Social Justice says PM Modi in Tiruppur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X