டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரத்தி எடுத்த ராகுல்காந்தி.. கத்தோலிக்க-பார்ரி தம்பதியினரின் மகன் இந்துவா? அட்டாக் செய்யும் பாஜக

Google Oneindia Tamil News

டெல்லி: கத்தோலிக்க தாய் மற்றும் பார்சி தந்தையின் மகனான ராகுல்காந்தியை 'இந்து' என காட்ட காங்கிரஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது? என பாஜக கேள்வியெழுப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் கட்ன்வா மாவட்டத்தில் உள்ள ஓம்காரேஸ்வரர் கோயிலில் ராகுல்காந்தி தரிசனம் செய்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து பாஜகவின் தேசிய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பொறுப்பாளர் அமித் மால்வியா இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

ஏற்கெனவே, "ராகுல்காந்தி தவறாக ஆரத்தி எடுத்திருந்தார்" என்று குற்றம்சாட்டியிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

திருவாரூரோ திருவள்ளூரோ.. உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்.. சவுக்கு சங்கர் அதிரடிதிருவாரூரோ திருவள்ளூரோ.. உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்.. சவுக்கு சங்கர் அதிரடி

இந்து

இந்து

இன்று மால்வியா தனது டிவிட்டர் பக்கத்தில், "கத்தோலிக்க தாய் மற்றும் பார்சி தந்தையின் மகனான ராகுல்காந்தியை 'இந்து' என காட்ட காங்கிரஸ் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறது? பெரும்பான்மையான இந்துக்கள் உள்ள இந்தியாவில் 'தேர்தல்' நடைபெறுவதுதான் காரணமா?" என கேள்வியெழுப்பியுள்ளார். இது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே இதேபோன்ற குற்றச்சாட்டை நேற்று இவர் முன்வைத்திருந்தார். அதில், ராகுல்காந்தி தவறாக ஆரத்தி எடுக்கிறார் என்றும் ராகுல் ஒரு 'தேர்தல்' இந்து எனவும் கூறியிருந்தார்.

ஆரத்தி சர்ச்சை

ஆரத்தி சர்ச்சை

இது குறித்து தனது ட்வீட்டில், "ஆரத்தி என்பது இடமிருந்து வலமாக எடுக்கக்கூடாது. வலமிருந்து இடமாகதான் எடுக்க வேண்டும். பூமி இடமிருந்து வலமாக சுற்றுகிறது, எனவே அதற்கு எதிர்த்திசையில்தான் ஆரத்தி எடுக்கப்பட வேண்டும்" என்று கூறியிருந்தார். ஆனால், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கெனவே இதற்கு முன்னர் கோயில்களில் தரிசனம் செய்திருந்த பிரதமர் மோடி இடமிருந்து வலமாகதான் ஆரத்தி சுற்றியிருந்தார் என்று அது தொடர்பான வீடியோக்களையும் பகிர்ந்து மால்வியாவை டேக் செய்து காங்கிரஸ் கட்சியினர் விளக்கம் கேட்டிருந்தனர்.

விளக்கம்

விளக்கம்

அதேபோல பூமி இடமிருந்து வலமாக சுற்றவில்லை. வடதுருவத்திலிருந்து பார்த்தால் அப்படி தெரியும். அதே தென்துருவத்திலிருந்து பார்த்தால் வலமிருந்து இடது நோக்கி சுற்றுவதாக தோன்றும் என்றும் டிவிட்டர் பயனாளிகள் விளக்கமளித்துள்ளனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு குறைவதற்குள் தற்போது மற்றொரு குற்றச்சாட்டை மால்வியா வைத்திருக்கிறார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு மேலெழுந்திருக்கிறது. பாஜகவினர் கோட்சேவின் இந்துத்துவத்தை பயன்படுத்துவதாகவும், ஆனால் காங்கிரஸ் காந்தியின் இந்துத்துவத்தை பின்பற்றுவதாகவும் அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.

வழிபாடு

வழிபாடு

முன்னதாக ஓம்காரேஸ்வரர் கோயிலில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் வழிபாடு செய்தார். கோயிலில் பாரம்பரிய முறைப்படி தலைப்பாகை கட்டி, காவி துண்டு அணிந்துகொண்டு இருவரும் தரிசனம் செய்துகொண்டனர். உடன் அம்மாநில முதலமைச்சர் கமல்நாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். 'பாரத் ஜடோ யாத்திரையின்' ஒரு பகுதியாக இந்த வழிபாடு நடைபெற்றிருக்கிறது. வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என தொடர் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அதன் ஒரு பகுதியாகதான் ராகுல்காந்தி கன்னியாகுமரியிலிருந்து யாத்திரையை தொடங்கி இருக்கிறார். இது ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது.

English summary
Why is Congress so keen to portray Rahul Gandhi, the son of a Catholic mother and a Parsi father, as a 'Hindu'? BJP has questioned. Amit Malviya, in-charge of BJP's National Information and Technology Department, has made this allegation after sharing photographs of Rahul Gandhi visiting the Omkareswarar temple in Madhya Pradesh's Katnwa district.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X