பாஜகவில் இருந்தாலும் நிதிஷ் குமாருக்கு நெருக்கம்.. பீகாரில் கோலோச்சிய சுஷில் குமார் மோடி! யார் இவர்?
பாட்னா: பீகார் மாநில முன்னாள் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுஷில் குமார் மோடி இன்று காலமானார். பீகார் அரசியலில் கடந்த 40 ஆண்டுகளாக செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கி வந்த சுஷில் குமாரின் வாழ்க்கை பயணம் குறித்து இங்கே பார்க்கலாம்.
பீகார் மாநில பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுஷில் குமார் மோடி இன்று காலமானார். கடந்த சில மாதங்களாக புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த சுஷில் குமார் மோடி இன்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். அவருக்கு வயது 72.

புற்றுநோய் பாதிப்பு: லோக்சபா தேர்தலில் கட்சி மேலிடம் போட்டியிட வாய்ப்பளிக்க முன்வந்தது. ஆனாலும், போட்டியிட விருப்பம் இல்லை என்று தனது உடல் நலனை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்தார். அப்போதுதான் தனக்கு புற்று நோய் பாதிப்பு உள்ளது என்ற தகவலையும் முதன் முதலாக அவர் பொது வெளியில் தெரிவித்தார்.
யார் இந்த சுஷில் குமார் மோடி: சுஷில் குமார் மோடிக்கு புற்று நோய் பாதிப்பு என்ற தகவலை கேட்டு அவரது ஆதரவாளர்கள் சோகத்தில் மூழ்கினர். கடந்த மாதம் முதல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுஷில் குமார் மோடி இன்று காலாமானர். பீகார் அரசியலில் கிட்டத்தட்ட 40 ஆண்டு காலம் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக விலங்கி வந்த சுஷில்குமார் மோடியின் பின்னணி குறித்து இங்கே பார்க்கலாம்.
நிதிஷ் குமார் அமைச்சரவையில்: பீகார் மாநில பாஜகவின் முத்த தலைவராக அறியப்பட்டவர் சுஷில் குமார் மோடி. 1973 ஆம் ஆண்டு பாட்னா பல்கலைக்கழகத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் சுஷில் குமார் மோடி. மாணவர் சங்க செயலாளராக சுஷில் குமார் அப்போது தேர்வு செய்யப்பட்டார். நிதிஷ்குமார் அமைச்சரவையில் துணை முதல்வராக கிட்டத்தட்ட 11 ஆண்டு காலம் சுஷில் குமார் மோடி இருந்தார்.
லோக்சபா எம்பி: பாஜகவில் இருந்தாலும் நிதிஷ் குமாருக்கு மிக நெருக்கமானவராக அறியப்பட்டார். 1996 முதல் 2004 வரை பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராகவும் பதவி வகித்தார். பாஜக தேசிய துணைத்தலைவராக 2003 ஆம் ஆண்டு சுஷில் குமார் மோடி நியமிக்கப்பட்டா.ர் 2005 ஆம் ஆண்டு வரை இந்த பொறுப்பில் அவர் இருந்தார்.
2004 ஆம் ஆண்டு பகல்பூர் தொகுதியில் போட்டியிட்டு லோக்சபா எம்பி பொறுப்பையும் வகித்தார். ஆனால் ஒரே ஆண்டில் எம்பி பதவியை உதறி தள்ளிவிட்டு பீகார் மாநில மேலவை உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு மாநிலங்களவை எம்பியாக சுஷில் குமார் மோடி தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு துவக்கத்தில் அவரது பதவிக்காலம் முடிந்தது.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?












Click it and Unblock the Notifications