மோடிக்கு பயந்து பாஜக தலைவர்கள் எனக்கு வணக்கம் கூட சொல்வதில்லை.. அடுத்து ராகுல் சொன்னதுதான் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபாவில் இன்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது நீட், அக்னிபாத் என்று பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ராகுல் காந்தி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், பாஜக தலைவர்களையும் மோடி அச்சுறுத்தி வைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதன் காரணமாக பாஜக தலைவர்கள் வணக்கம் கூட வைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

லோக்சபா தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கூடிய நிலையில், முதலில் புதிதாகத் தேர்வான எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

Narendra Modi Rahul gandhi parliament

அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தலைவர்களும் பேசி வரும் நிலையில், இன்று ராகுல் காந்தி உரையாற்றினார்.

ராகுல் காந்தி: லோக்சபாவில் பேசிய ராகுல் காந்தி பல விஷயங்கள் குறித்தும் பேசினார். முதலில் அவர், வாழ்க அரசியல் சாசனம் என உரையைத் தொடங்கினார். அப்போதே பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கி ஜே கோஷமிட்டனர். மேலும், ராகுல் காந்தி இந்து கடவுளான சிவன் படத்தைக் காட்டியும் உரையாற்றினார். அப்போது அதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், லோக்சபாவில் சிவன் படத்தைக் காட்ட அனுமதி இல்லையா என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். மேலும், சிவன் படத்தைக் காங்கிரஸ் காட்டியதால் சிலருக்குக் கோபம் வந்திருக்கலாம் என்றும் அவர் பேசினார்.

தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். நீட் விவகாரம், வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிவது, வேலைவாய்ப்பின்மை என பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசினார். ராகுல் காந்தி பேசும் போது பிரதமர் மோடி, அமைச்சர் அமித் ஷா எனப் பலரும் அவரை குறுக்கிட்டுப் பேசினர்.

வணக்கம் கூட வைப்பதில்லை: அவர் மேலும் பேசுகையில், "பிரதமர் மோடி அவைக்கு வரும்போது என்னைப் பார்த்து சிரிப்பது கூட இல்லை.. மோடி பாஜக தலைவர்களையும் பயமுறுத்தி வைத்து இருக்கிறார். இதனால் பாஜக தலைவர்கள் எனக்கு வணக்கம் கூட வைப்பதில்லை" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+