தென்னிந்தியாவில் பாய போகுது "புல்லட்" ரயில்.. விரைவில் வந்தே ஸ்லீப்பர் வேற! அள்ளி கொடுக்கும் பாஜக
டெல்லி: பாஜக இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், அதில் ரயில்வே துறை சார்ந்து பல முக்கிய அறிவிப்புகள் உள்ளன. குறிப்பாக புல்லட் ரயில் குறித்து மிக முக்கிய அறிவிப்பு இருக்கிறது.
நமது நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

பாஜக தேர்தல் அறிக்கை: தேர்தலுக்கு சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. காங்கிரஸ் ஏற்கனவே தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுவிட்ட நிலையில், இப்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ரயில்வே சார்ந்து பல அறிவிப்புகள் உள்ளன.
இதற்கிடையே இந்தியாவில் உள்ள விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும் என்று பாஜக தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்துள்ளது. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், அம்ரித் பாரத், நமோ பாரத் உள்ளிட்ட புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தப்படும் என்று பாஜக கூறியிருக்கிறது. மேலும், வந்தே பாரத் ரயில்களைப் போலவே வந்தே ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும்.
அதிநவீன ரயில்கள்: நவீன சாலை நெட்வொர்க்கில் கவனம் செலுத்துவோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.. புதிய எக்ஸ்பிரஸ் ரயில்கள், மெட்ரோ ரயில்களை மேம்படுத்துவோம் என்றும் நாடு முழுக்க விரிவான மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்கள் உருவாக்கப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், புதிய விமான நிலையங்களை உருவாக்குவது, குறைந்த விலையில் 5ஜி கிடைக்க நடவடிக்கை, அடுத்து 6G தொழில்நுட்பத்துடன் கூடிய டெலிகாம் உள்கட்டமைப்பு ஆகியவை குறித்தும் பாஜக வாக்குறுதி அளித்துள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்வதற்குப் பண்டிகை உள்ளிட்ட சிறப்புக் காலங்களில் ஏற்கனவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் இடத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் சென்று திரும்ப உரிய நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது. இவை தவிர பாஜக கூறியுள்ள மற்ற முக்கிய அறிவிப்புகள்
புதிய ரயில்கள் அமைக்கப்படும்: பயணிகள் மற்றும் சரக்கு சேவையை விரிவுபடுத்த புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் 31 ஆயிரம் கிமீ ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அடுத்த ஒவ்வொரு ஆண்டும் 5000 கிமீ தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 2030ஆம் ஆண்டிற்குள் ரயிலில் அதிக பயணிகள் பயணிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரயில் பாதுகாப்பு அமைப்பான கவாச்சை உருவாக்கி, அதை வேகமாக விரிவுபடுத்தி வருகிறோம். அடுத்த சில ஆண்டுகளில், ரயில்வே நெட்வொர்க்கை மின் மயமாக்கியது போல் கவாச் சிஸ்டம்களை நாடு முழுக்க அமல்படுத்துவோம்.
புல்லட் ரயில்கள்: நாங்கள் ஏற்கனவே 1,300+ ரயில் நிலையங்களை உலகத் தரத்தில் மறுவடிவமைப்பு செய்யத் தொடங்கியுள்ளோம். இந்தத் திட்டத்தை மற்ற ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்துவோம். இப்போது நாட்டிலேயே முதல் புல்லட் ரயில் வழித்தடத்தை நாங்கள் உருவாக்குகிறோம்.இதில் கிடைத்த அனுபவத்தை வைத்து வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் புல்லட் ரயில் பாதைகளுக்கான சாத்தியக்கூறு ஆய்வுகளைத் தொடங்க உள்ளோம். மேலும், பொதுமக்கள் ரயில் டிக்கெட்களை எளிதாக புக் செய்ய சூப்பர் செயலி ஒன்று வெளியிடப்படும் என்று பாஜக பல வாக்குறுதிகளை அளித்துள்ளன.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா?












Click it and Unblock the Notifications