டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாயிகளுக்கு ஓய்வூதியம், வட்டியில்லா கடன் வழங்கப்படும்- பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி

Google Oneindia Tamil News

Recommended Video

    BJP Manifesto 2019: இந்த 4 அம்சங்கள்தான் பாஜகவின் தேர்தல் அறிக்கையில் முக்கியமானது- வீடியோ

    டெல்லி: 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு ரூ 1 லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது.

    அதிமுக, திமுக, பாமக, பாஜக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

    அதன்படி தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியும் வெளியிட்டு விட்டது. இதையடுத்து மிகவும் எதிர்பார்ப்பில் இருந்த பாஜகவின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட்டது

    காஷ்மீர்.. பொது சிவில் சட்டம்.. ராமர் கோவில்.. பாஜக ஃபோகஸ் செய்த 4 முக்கிய விஷயங்கள்! காஷ்மீர்.. பொது சிவில் சட்டம்.. ராமர் கோவில்.. பாஜக ஃபோகஸ் செய்த 4 முக்கிய விஷயங்கள்!

    ராஜ்நாத் சிங்

    ராஜ்நாத் சிங்

    சுமார் 48 பக்க புத்தகம் கொண்ட தேர்தல் அறிக்கைக்கு சங்கல்ப் பத்ரா என பெயரிடப்பட்டு அது இன்று வெளியானது. பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசினார்.

    நடவடிக்கை

    நடவடிக்கை

    அவர் பேசுகையில் தீவிரவாதத்தை ஒழிக்கும் திட்டங்கள் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்படும். தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை பாஜக செய்யும் என்றார் ராஜ்நாத் சிங்.

    வட்டியில்லாத கார்டு

    வட்டியில்லாத கார்டு

    இதையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள அம்சங்களை அவர் பட்டியலிட்டார். அதில் 5 ஆண்டுகள் வரை விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கப்படும். கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 25 லட்சம் கோடி ஒதுக்கப்படும். விவசாயிகளுக்கு வட்டியில்லாத கிரெடிட் கார்டு வழங்கப்படும்.

    இரட்டிப்பாக்கும் நடவடிக்கை

    இரட்டிப்பாக்கும் நடவடிக்கை

    2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கட்டி தரப்படும். 60 வயதான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். சிகான் சம்மான் திட்டத்தில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6000 வழங்கப்படும். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.

    English summary
    BJP Manifesto released today stating that there will be no interest collected for farmers upto 1 lakh debt.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X