தயாநிதி மாறன், டிஆர் பாலு.. ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் பாஜக இரண்டு சம்பவம்.. தமிழக பாஜகவும் அதிரடி

திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், டிஆர் பாலு ஆகியோருக்கு நாடாளுன்றத்தில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி, மன்சுக் மாண்டவியா ஆகியோர் பதிலடி கொடுத்தனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் பாஜக இரண்டு சம்பவங்களை செய்திருக்கிறது. மத்திய அரசையும் ஒப்பந்ததாரர்களையும் குற்றம்சாட்டி பேசிய தயாநிதி மாறனுக்கு நிதின் கட்காரி பதிலடி கொடுத்தார். இதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் கட்டப்படாதது குறித்து டிஆர் பாலு கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக பதிலடி கொடுத்தார். நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து பதிலடி கொடுத்ததை உடனுக்குடன் தமிழில் சப்டைட்டிலுடன் மொழி பெயர்த்து தமிழக பாஜக வெளியிட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் ஒவ்வொரு நாளும் என்ன பேசுகிறார்கள் என்பதை திமுக வெளியிட்டு வருகிறது. அதற்கு மத்திய அரசின் ரியாக்சன் அதற்கு என்ன என்பதை மக்களிடம் வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ட்விட்டரில் அதனை பரப்பியும் வருகிறது. இதற்கு பதிலடியாக தமிழக பாஜகவும், திமுக எம்பிக்கள் கேள்வி கேட்பதையும் அதற்கு மத்திய அமைச்சர்களின் பதிலடிகளையும் தமிழில் சப் டைட்டிலும் வெளியிட்டு வருகிறது. திமுக மற்றும் பாஜக ஆகியவை மக்கள் மன்றத்தில் தாங்கள் செய்வதை தீவிரமாக வெளிப்படுத்த தொடங்கி உள்ளன.

அண்மையில் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் பேசியதை திமுக வெளியிட்டது. இதற்கு பதிலடியாக பாஜகவும் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்களை உடனுக்குடன் தமிழில் சப் டைட்டில் போட்டு வெளியிட்டு வருகிறது. பிரதமர் மோடி பேச்சு அண்மையில் வெளியிடப்பட்டது. நேற்று மத்திய அமைச்சர்கள் நிதின் கட்காரி மற்றும் மன்சுக் மாண்டவியா ஆகியோர் பேச்சை வெளியிட்டுள்ளது.

 பெங்களூரு சாலை

பெங்களூரு சாலை

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரியிடம், திமுக எம்பி தயாநிதி மாறன் சென்னை, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மோசமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது தயாநிதி மாறன் கூறுகையில், "சார் நான் அண்மையில் சென்னையில் இருந்து ராணிப்பேட்டையில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. சாலைகள் மோசமாக உள்ளன. திட்டத்தை செயல்படுத்த தேவையான நிலத்தை மாநில அரசு கொடுத்துவிட்டது. விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. உங்கள் ஒப்பந்ததாரர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டார்கள். கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக உள்ளது. 100 கி.மீ பயணிக்க நான்கரை மணி நேரம் ஆகிறது. இது மிகவும் மோசம். நீங்கள் சொல்லலாம் ஒப்பந்ததாரர்கள் நீதிமன்றம் சென்றுவிட்டார்கள் என்று? இதென்ன அணுகுமுறை, இதிலிருந்து வெளியே எப்படி வருவது? ஏன் சாதாரண மக்கள், தமிழக மக்கள் பாதிப்படைய வேண்டும்? ஏனென்றால் நீங்கள் உறுதியான நிலைப்பாட்டை கூறவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் திட்டம் நிறைவடையும் என்பதை உறுதிபடுத்துங்கள்" இவ்வாறு தயாநிதி மாறன் எம்பி கூறினார்.

இது தான் பிரச்சனை

இது தான் பிரச்சனை

இதற்கு பதில் அளித்த அமைச்சர் நிதின் கட்காரி, "சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள பொதுவான பிரச்சனையை நான் அங்கு நேரில் சென்று பார்த்தேன். பிரச்சனை எனது துறையில் இல்லை. இங்கு உங்களின் ஒத்துழைப்பு எனக்கு தேவை. கட்டுமானப் பொருட்கள் கிடைப்பதில்லை. சில சமயம் 3 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்குகிறார்கள். அடுத்த 3 மாதத்திற்கு அனுமதி கோருவது கடினமானது. அங்கு தோண்டுவதற்கு அனுமதி இல்லை. அது சாலையை அமைக்க மிகப்பெரிய தடையாக உள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை உள்ளது. சுற்றுச்சூழல் அனுமதி, வன அனுமதி இல்லை. இதனிடையே பெங்களூரு பகுதியில் (கர்நாடகா) சாலையில் பணிகள் நன்கு நடைபெறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் நிலம், அனுமதி இல்லை. இந்த சூழலில் எவ்வாறு ஒப்பந்ததாரர்கள் பணிகளை மேற்கொள்ள முடியும். இது தான் அங்கு பிரச்சனை.

2 மணிநேரத்தில் போகலாம்

2 மணிநேரத்தில் போகலாம்

தமிழ்நாட்டில் நான் பணிகளை மேற்கொள்ள விரும்புகிறேன். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை. நாங்கள் பல திட்டங்களை வைத்துள்ளோம். இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல முறை எடுத்துக்கூறியுள்ளேன். தமிழ்நாடு முதல்வரிடமும் பலமுறை இதுதொடர்பாக எனது தகவல்களை அனுப்பி உள்ளேன். நிலம் , சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் சாலைகளை எவ்வாறு அமைக்க முடியும். உண்மையில் அந்த பணி நடக்கிறது. சென்னை பெங்களூரு நெடுஞ்சாலை பணி நிறைவடைய வேண்டும். இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்த பணியை நான் முடிக்க நினைக்கிறேன். இதனால் சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் சென்றுவிடலாம். நான் பெங்களூரு முதல் மைசூரு வரை சென்றேன். அந்த பணிகள் நிறைவு பெற்றுவிட்டது. அடுத்த மாதம் அதை திறக்க பிரதமர் அலுவலகத்தில் தேதி கேட்டுள்ளோம். இதனால் பெங்களூருவில் இருந்து மைசூருக்கு ஒரு மணி நேரத்தில் சென்றுவிட முடியும். எனக்கு இந்த சாலையின் முக்கியத்துவம் புரிகிறது. உங்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் 100 சதவீதம் பணிகள் நிறைவடையும். இந்த கேள்வியை கேட்ட உங்களுக்கு நன்றி" இவ்வாறு அமைச்சர் நிதின் கட்காரி கூறினார்.

எய்ம்ஸ் குறித்து கேள்வி

எய்ம்ஸ் குறித்து கேள்வி

இதனிடையே நாடாளுமன்றத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து டிஆர் பாலு கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், " என்னிடம் இரண்டு கேள்விகள் இருக்கின்றன. உள்கட்டமைப்பு இல்லாமல் எத்தனை கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன என்பது எனது முதல் கேள்வி. இரண்டாம் கேள்வி பிரதமர் அடிக்கல் நாட்டிய பிறகும் எத்தனை கல்லூரிகளின் பணிகள் துவங்கப்படவில்லை" என்று கேள்வி எழுப்பினார்.

மதுரை எய்ம்ஸ்

மதுரை எய்ம்ஸ்

இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, "இங்கு எப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கேள்வி மதுரை எய்ம்ஸ் பற்றியது. அதோடு இவர்கள் மதுரையில் எய்ம்ஸ் இல்லை என்று கூறி வருகிறார்கள். சபாநாயகர் அவர்களே, மதுரையில் ஏற்கனவே எய்ம்ஸ் ஏற்கனவே வந்துவிட்டது. அங்கு எய்ம்ஸ் இல் பாடங்கள் நடத்தப்படுகின்றன. உள் கட்டமைப்புகள் மட்டுமே மீதமிருக்கிறது. வகுப்புகள் நடக்கிறது. மாணவர்கள் அங்கு பயில்கிறார்கள். நான் இந்த அவையின் வாயிலாக தமிழக மக்களுக்கு ஒன்றை உறுதிபடுத்த விரும்புகிறேன். எந்த காரணமும் இன்றி அவர்கள் அரசியல் செய்கிறார்கள். இப்போது மதுரை எய்ம்ஸ் இல் மருத்துவபடிப்பு துவங்கப்பட்டுவிட்டது. எதற்காக உங்கள் மாநில மக்களுக்கு தவறான தகவல்களை சொல்கிறீர்கள். மதுரையில் கல்வி துவங்கிவிட்டது. மதுரையில் எய்ம்ஸ் இயக்குநர் இருக்கிறார். மதுரை எய்ம்ஸ் இல் பாடங்கள் நடத்தப்படுகின்றன. வெறும் உள்கட்டமைப்புகள் மட்டும் இல்லை.

மான்சுக் விளாசல்

மான்சுக் விளாசல்

முதலில் இவர்கள் குறித்த நேரத்தில் நிலம் வழங்கவில்லை. இரண்டாவது இந்த திட்டம் jica நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் ஆகும். இரண்டு ஆண்டுகளாக jica ஆட்கள் இங்கு வரமுடியவில்லை. அதனால் அதன் மதிப்பீடு இரு மடங்காக உயர்ந்தது. முன்பே எய்ம்ஸ் அமைக்க சிறந்த உள்கட்டமைப்பு உருவாக்கினோம். 1900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏஜென்சி அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் வரை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உங்களுக்கு தெரியும். சபாநாயகர் அவர்களே இங்கு பலரின் விரக்தி என்னவென்றால், அங்கு எந்நெந்த மருத்துவ கல்லூரிகளில் குறைந்த ஆசிரியர்கள், குறைந்த நோயாளிகள் இருக்கிறார்களோ அதற்கு ஆக்சன் எடுத்தேன்.அதற்கு தற்போது ரியாக்சன் வருகிறது" இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+