Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கல்யாணம் ஆகலையா? வேலை கிடைக்கலையா? ஜெய் ஸ்ரீ ராம் தான் ஒரே தீர்வு.. சீரியஸாக பேசிய பாஜக எம்பி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வேலையில்லாத் திண்டாட்டம், குடும்ப கஷ்டம், விவசாயிகளுக்குச் சிக்கல் என எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் "ஸ்ரீ ராம், ஜெய் ராம், ஜெய் ஜெய் ராம்" என உச்சரித்தாலே அனைத்துப் பிரச்சனைகளும் தீரும் என பாஜக எம்பி அஜய் பட் பேசியுள்ளார். விபி-ஜி ராம் ஜி திட்டம் குறித்து நடந்த விவாதத்தில் அஜய் பட் இந்தக் கருத்துகளைக் கூறினார்.

காங்கிரஸ் அரசு கடந்த 2005ல் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என அழைக்கப்படும் இந்த திட்டத்தை பாஜக இப்போது முழுமையாக மாற்றி அமைக்கிறது. இதற்குப் பதிலாக விக்க்சித் பாரத்- ரோஸ்கர் மற்றும் ஆஜீவிகா மிஷன் (கிராமின்) அதாவது விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

BJP MP Ajay Bhatt s Parliament Speech Chant Jai Shri Ram to Fix Marriages Jobs and all issues

அஜய் பட்

இந்த மசோதா தொடர்பான விவாதம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய உத்தரகண்ட் எம்.பி. அஜய் பட், பல்வேறு கருத்துகளைக் கூறினார். குறிப்பாக ராமர் குறித்து வாசங்களைத் திரும்பத் திரும்ப உச்சரிக்க வேண்டும் என்ற அவர், அப்படிச் செய்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவரது பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

இந்த மசோதா குறித்த விவாதத்தில் பேசிய அஜய் பட், "இந்த மசோதாவை அரசு எந்தவொரு தவறான நோக்கத்திலும் எடுத்து வரவில்லை. மக்களின் பிரச்சனைகளைச் சரி செய்யவே அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவைத் தெளிவான நோக்கங்கள் உடனேயே மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஜெய் ஸ்ரீ ராம்

மேலும், ஒரு பெண்ணுக்குத் திருமணம் ஆகவில்லை என்றாலோ, வேலை கிடைக்கவில்லை என்றாலோ, வீட்டில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ, கணவன் மனைவிக்குள் சுமுகமான உறவு இல்லாவிட்டால், மகன் தவறான பாதையில் சென்றாலோ அல்லது பசு பால் கொடுக்க மறுத்தாலோ நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்.. 'ஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம்' என்று நாமத்தை மட்டும். நினைத்த காரியங்கள் அனைத்தும் கைகூடும்" என்று அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம்

இன்றைய தினம் இந்த விபி-ஜி ராம் ஜி திட்டம் லோக்சபாவில் நிறைவேறியது. இந்த மசோதா குறித்து விவாதம் நடந்தபோது நாடாளுமன்றத்தில் கடும் அமளி நிலவியது. மன்ரேகா எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தைப் பலவீனப்படுத்தவே மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளதாகச் சாடிய எதிர்க்கட்சியினர், மசோதா நகல்களையும் கிழித்தெறிந்து தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். இதற்குப் பதிலடியாக, பாஜக உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகளைக் கடுமையாக விமர்சித்தனர். சிவராஜ் சிங் சவுகான், அஜய் பட் போன்ற மூத்த தலைவர்கள் மசோதாவுக்கு ஆதரவாகப் பேசினர்.

அப்போது தான் ராமர் நாமம் எல்லாப் பிரச்சனைகளையும் தீர்க்கும் என அஜய் பட் கூறியிருந்தார். இந்த அஜய் பட் உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தின் ராணிகேத் பகுதியைச் சேர்ந்தவர். அல்மோரா கல்லூரியில் பி.ஏ., எல்.எல்.பி. பட்டம் பெற்றவர். இவர் 1985ல் பாஜக இளைஞர் பிரிவான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவில் இணைந்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். உத்தரப் பிரதேச பாஜக செயற்குழு உறுப்பினராகவும், அல்மோரா மாவட்ட அமைப்பாளராகவும் செயல்பட்டார்.

யார் இவர்

அதே 1985இல், அவர் பாஜக மாநில செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1996 மற்றும் 2012 ஆண்டுகளில் சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார்.. 2012-இல் காங்கிரஸ் ஆட்சி அமைத்தபோது, மாநில எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்பட்டார். மேலும், உத்தரகண்ட் பாஜக மாநிலத் தலைவராக இருந்தார். 2019ல் நைனிடால்-உதம்சிங் நகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021ல் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறை இணை அமைச்சராக பதவியேற்றார். 2024 லோக்சபா தேர்தலிலும் நைனிடால் தொகுதியிலேயே மீண்டும் வெற்றி பெற்றார். இருப்பினும், இந்த முறை அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+