பதான் சர்ச்சை! காவி நிறத்தை அவமதிப்பதா? நாட்டை விட்டே வெளியேற்றணும்.. பாஜக எம்பி பிரக்யா ஆவேசம்
டெல்லி: காவி நிறத்தை ஆபாசமாக சித்தரித்த பதான் படத்தை யாரும் பார்க்கக் கூடாது என்றும் அவர்களை சீக்கிரமே நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் பாஜக எம்பி பிரக்யா சிங் தாகூர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாரூக்கான், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடிப்பில் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியாகவுள்ளது பதான் திரைப்படம். இந்த படத்தின் முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியுள்ளது.
பேஷ்ரம் ரங் எனத் தொடங்கும் இந்த பாடலை இதுவரை 4 கோடிக்கும் மேற்பட்டோர் யூடியூபில் கண்டு களித்துள்ளார்கள். இந்த பாடல்தான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த படத்தில் தீபிகாவும் ஷாரூக்கும் படு கவர்ச்சியாக நடித்துள்ளார்கள்.

மஞ்சள் நிற நீச்சல் உடை
மஞ்சள் நிற நீச்சல் உடையில் தீபிகா படுகோன் வருவது போல் பாடல் தொடங்குகிறது. இதன் பிறகு ஊதா நிறம், சில்வர் நிறம், நீலம் உள்ளிட்ட நிறங்களில் ஆபாசமான டூ பீஸ் உடையை தீபிகா அணிந்திருந்தார். இந்த பாடலில் கடைசியில் காவி நிறத்தில் ஒரு உடை அணிந்திருக்கிறார். அந்த உடையில் முதுகில் துணியே இல்லை.

முக்கால் ஸ்கர்ட்
கீழே அணிந்திருக்கும் முக்கால் ஸ்கர்ட்டும் கவர்ச்சியாக தொடை எல்லாம் தெரியும் அளவுக்கு உள்ளது. இந்த பாடலுக்கு இருவரும் மிக மிக கவர்ச்சியாக நடன அசைவுகளை கொடுக்கிறார்கள், குடும்பத்துடன் அமர்ந்து இந்த பாடலை பார்க்க முடியாத நிலை உள்ளது. இந்துக்களின் புனித நிறமான காவி நிறத்தை படக்குழுவினர் கொச்சைப்படுத்திவிட்டதாக சர்ச்சை கிளம்பியுள்ளது.

சாமியார்கள்
சாதுக்கள், சாமியார்கள், மகான்கள், சித்தர்கள் அணியும் காவி நிற உடையை இப்படியா ஆபாசமாக காட்டி இந்துக்களின் மனங்களை புண்படுத்துவது என கேள்வி எழுப்பியுள்ள இந்துத்துவா ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் #BoycottPathaan #BoycottBollywood என்ற ஹேஷ்டேக்குகளை டிரென்டாக்கி வருகிறார்கள்.

அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கண்டனம்
மத்திய பிரதேச மாநில அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவோ, இந்த பாடலில் உள்ள காட்சிகளை மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் மத்திய பிரதேசத்தில் பதான் திரைப்படம் வெளியிட அனுமதிக்க முடியாது என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தூரில் ஷாரூக்கானின் உருவபொம்மையை எரித்து இந்துத்துவா ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

பதான் படத்தை தடை செய்ய கோரிக்கை
மேலும் பதான் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இந்த நிலையில் இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: பல அரசியல்வாதிகள் நீண்ட காலமாக பாடுபட்டு வருவதை 30 நொடிகளில் தீபிகா செய்துவிட்டார். காவியை இந்திய தேசத்தின் விருப்பமான நிறமாக்கிவிட்டார் என தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜ் நறுக் ட்வீட்
அது போல் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்தூரில் ஷாரூக்கானின் உருவபொம்மையை போராட்டக்காரர்கள் எரித்து வருகிறார்கள். பதான் திரைப்படத்திற்கு தடை கோருகிறார்கள். காவி உடை அணிந்து பெண்களை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்குகிறார்கள். சில எம்பிக்கள், எம்எல்ஏக்கள் வெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.

காவி உடை அணிந்த சாமியார்கள்
காவி உடை அணிந்த சாமியார் சிறுமிகளை பலாத்காரம் செய்கிறார். இதெல்லாம் பரவாயில்லை. ஆனால் ஒரு நடிகை படத்தில் காவி உடை அணிந்து வருவது தவறா என பிரகாஷ் ராஜ் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார். பதான் சர்ச்சை குறித்து பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் படக்குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்து பேசியுள்ளார்.

காவி நிறத்தை தவறாக சித்தரித்த பதான்
அவர் கூறியிருப்பதாவது: காவி நிறத்தை தவறாக சித்தரித்துள்ள பதான் திரைப்படத்தை யாரும் பார்க்கக் கூடாது. அவர்களின் எந்த படத்தையுமே பார்க்க வேண்டாம். அவர்களை சீக்கிரமே நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும். அந்த காவி உடை காட்சிகளை மாற்றவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். காவி நிறம் என்பது நம் நாட்டின் பெருமை. தேசியக் கொடியிலும் காவி வண்ணம் உள்ளது. அதை அவமதிக்கும் செயல்களை அனுமதிக்க மாட்டோம். காவி நிறத்தை யார் அவமதித்தாலும் சட்ட நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடத்தப்படும் என பிரக்யா சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். அடுத்த மாதம் 25-ஆம் தேதி பதான் படம் திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பதான் சர்ச்சை குறித்து ஷாரூக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கையில் குறுகிய பார்வை என குறிப்பிட்டுள்ளார்.
-
தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி.. கடும் போட்டி கொடுக்கும் அதிமுக! விஜய் நிலைமை.. வெளியான புதிய கருத்து கணிப்பு -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும்.. 297 அறிவிப்புகள் அடங்கிய அதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்ட எடப்பாடி -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
திமுக எங்களுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியதில் திருப்தி இல்லை.. இருந்தாலும்! சிபிஎம் சண்முகம் பேட்டி! -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?











Click it and Unblock the Notifications