அக்னிபாத் திட்டம்.. எம்எல்ஏ, எம்பி-க்களுக்கு எதற்கு ஓய்வூதியம்.. பாஜக எம்.பி. வருண் காந்தி கேள்வி..!
டெல்லி: அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் பெற தகுதியில்லை என்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் எதற்கு ஓய்வூதியம் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 'அக்னிபாத்' என்ற திட்டத்தின் கீழ் 17.5 முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய அரசு தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஜூன் 14ல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு வெளியிட்டார். இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க வாய்ப்பளிக்கப்படும். 4 ஆண்டு பணியை முடித்து வெளியில் செல்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது

இளைஞர்கள் போராட்டம்
இதனால் அக்னிபாத் திட்டத்திற்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தத் திட்டம் நீண்டநாள் ராணுவ சேவையாற்ற விரும்பும் இந்திய இளைஞர்களின் விருப்பத்துக்கு மாறாக உள்ளது. மேலும் ஒப்பந்த பணியாக ராணுவ சேவை மாற்றப்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து பீகார், உத்தரப் பிரதேசம், தெலங்கானா உட்பட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. அதேபோல் அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ரயில்களுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன.

அக்னிபாத் கைவிடப்படாது
தொடர்ந்து ராணுவ விவகாரங்கள் துறை கூடுதல் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் அக்னிவீரர்களுக்கும் வழங்கப்படும். ஒருபோதும் அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது. இந்திய ராணுவத்தை இளமையாக்கும் நோக்கில் நீண்ட காலம் திட்டமிடப்பட்டு கொண்டு வரப்பட்டது அக்னிபாத் திட்டம் என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்
இதனிடையே அக்னிபாத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. முக்கியமாக காங்கிரஸ் கட்சி டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், பாஜகவின் அக்னிபாத் திட்டத்தை ஆக்ரோஷமாக விமர்சித்தனர். இது இந்திய ராணுவத்தை பலவீனப்படுத்தும் நடவடிக்கை என்று குற்றம்சாட்டப்பட்டது.

வருண் காந்தி ட்வீட்
இந்த நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வருண்காந்தியின் ட்வீட் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அக்னிபாத் திட்டம் குறித்து அவர், 4 ஆண்டுகாலம் இந்திய ராணுவப் பணியில் இருக்கும் அக்னி வீரர்கள் ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என்றால், மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டும் எதற்கு ஓய்வூதியம். இந்த நாட்டைக் காப்பவர்கள் ஓய்வூதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்றால், நானும் எனது ஓய்வூதியத்தை விட்டுக் கொடுக்க தயார் என்று தெரிவித்துள்ளார். மேலும், எம்எல்ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்களது ஓய்வூதியத்தை விட்டுக் கொடுத்தால், அக்னி வீரர்கள் அதனைப் பெறுவதை உறுதிப்படுத்த முடியுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications