இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை எட்டும் இலக்கை நோக்கி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேகமாக நகர்ந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட மாநிலங்களவைத் தேர்தல்கள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் ஏற்பட்டுள்ள பிளவுகள், பாஜகவுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

நாடாளுமன்றத்தில் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் போன்ற முக்கிய சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இருபங்கு பெரும்பான்மை அவசியமாகிறது. மாநிலங்களவையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர்.

BJP NDA Rajya Sabha Narendra Modi

இந்த நிலையில், அந்த பெரும்பான்மையை பெற 163 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இந்த நிலையில், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாகவுள்ள 24 மாநிலங்களவை இடங்களுக்கும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஒடிசா மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு இடத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

பாஜக

மொத்தம் 27 இடங்களுக்கான இந்தத் தேர்தலில், பெரும்பாலான வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த 19 வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மாநிலங்களவையில் அந்த கூட்டணியின் பலம் 148 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் ஜார்கண்ட் மற்றும் மிசோரம் மாநிலங்களில் மூன்று இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

என்டிஏ

இந்த மூன்று இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அது நடந்தால் கூட்டணியின் பலம் 151 ஆக உயரும். மேற்கு வங்க அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் பாஜக கூட்டணிக்கு சாதகமாக அமையக்கூடும் என கூறப்படுகிறது. சமீபத்திய சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு திரிணமூல் காங்கிரஸில் அதிருப்தி அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் சில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தலைமையின் மீது அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாநிலங்களவை உறுப்பினர்

ஏற்கனவே அந்தக் கட்சியைச் சேர்ந்த மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி விலகியதாக கூறப்படும் நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் 154 ஆக உயரும். மேலும் எதிர்காலத்தில் கூடுதல் உறுப்பினர்கள் விலகினால், மாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை எட்டும் வாய்ப்பு உருவாகலாம் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

இண்டியா கூட்டணி

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் அணியான இண்டியா கூட்டணியின் பலம் தற்போது குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு சேர்த்து 64 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், திமுக, ஆம் ஆத்மி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் தனித்தனி நிலைப்பாடுகளுடன் செயல்பட்டு வருகின்றன. முக்கிய சட்ட மசோதாக்கள் மீது இக்கட்சிகள் எடுக்கும் முடிவுகள் மாநிலங்களவையின் அரசியல் சமநிலையை தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.

பாஜக கூட்டணி

மாநிலங்களவையில் தற்போது பாஜக கூட்டணிக்கு சாதகமாக மாறி வருவதாக கூறப்பட்டாலும், மக்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மை இன்னும் எட்டப்படாத இலக்காகவே உள்ளது. 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மைக்கு 363 உறுப்பினர்கள் தேவை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சுமார் 293 உறுப்பினர்கள் உள்ளதாக கூறப்படுகிறது. சில பிராந்திய கட்சிகளைச் சேர்ந்த அதிருப்தி எம்.பி.க்களின் ஆதரவு கிடைத்தாலும், அந்த எண்ணிக்கை 313 வரை மட்டுமே உயரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் மக்களவையில் இன்னும் கணிசமான இடைவெளி நீடிக்கிறது.

பாஜக தலைமை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரித்து, மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட அரசமைப்புச் சட்டத் திருத்த முயற்சி, தேவையான பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் வெற்றி பெறவில்லை. இதுபோன்ற முக்கிய சட்ட மாற்றங்களை முன்னெடுக்க மாநிலங்களவையிலும் மக்களவையிலும் வலுவான பெரும்பான்மை அவசியம். இதனால், மாநிலங்களவையில் தனது பலத்தை தொடர்ந்து உயர்த்துவதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கவனம் செலுத்தி வருகிறது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+