Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராஜ்யசபா தேர்தலில் மீண்டும் பலத்தை நிரூபித்திருக்கிறது பாஜக.. எப்படி சாத்தியமானது? மேட்டரே இதுதான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநிலங்களவைத் தேர்தல் மூலம் சிறிய கட்சிகள், சுயேட்சை எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் ஈர்ப்பது, பிற கட்சிகள் எம்.எல்.ஏக்களை தங்களுக்கு வாக்களிக்க வைப்பது என பாஜக மீண்டும் தனது பலத்தை நிரூபித்து இருக்கிறது.

குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், வெற்றியை தீர்மானிப்பவர்களான மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றன.

இதில் அரியானா, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாஜக பிற கட்சி எம்.எல்.ஏக்கள், சுயேட்சை எம்.எல்.ஏக்களை தங்கள் பக்கம் வளைத்து கூடுதல் இடங்களில் வெற்றியை பதிவு செய்து இருக்கிறது.

8 இடங்களில் வென்ற பாஜக

8 இடங்களில் வென்ற பாஜக

16 இடங்களில் 8 இடங்களை பாஜக பெற்றிருக்கிறது. ஆனால், ராஜஸ்தானில் முன்கூட்டியே காங்கிரஸ் சுதாரிப்புடன் எம்.எல்.ஏக்களை ரிசார்டில் தங்க வைத்ததால் அங்கு நினைத்ததை பாஜகவால் செய்ய முடியவில்லை. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா 3 இடங்களையும் அரியானா மற்றும் ராஜஸ்தானில் தலா ஒரு இடத்தையும் பாஜக வென்று இருக்கிறது.

பாஜகவின் பலம்

பாஜகவின் பலம்

தேர்தலில் நேரடியாக மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவதை தாண்டி தேர்தலுக்கு பிறகு எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், எதிர்க்கட்சி அணியில் உள்ள சிறிய கட்சிகள், சுயேட்சைகளை தங்கள் பக்கம் ஈர்த்து பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்தது பாஜக. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இத்தகைய செயல்பாடுகள்தான் அக்கட்சியை அசைக்க முடியாத சக்தியாக பாஜகவை அடையாளப்படுத்திக் காட்டின. ஆனால், மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் அது நிறைவேறவில்லை.

அதிமுகவை நம்பிய பாஜக

அதிமுகவை நம்பிய பாஜக

வரும் ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் நடைபெற உள்ள நிலையில், வெற்றிக்கு தேவையான 20,000 வாக்குகளை விட குறைவாகவே பாஜகவிடம் இருந்தது. எனவே அதன் கூட்டணி கட்சியான அதிமுக மற்றும் நட்பு கட்சிகளாக கருதப்படும் பிஜு ஜனதா தளம் மற்றும் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகியவற்றையும், சுயேட்சைகள் மற்றும் சிறிய கட்சிகளையும் பாஜக நம்பி இருந்தது.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

இந்த சூழலில்தான் நேற்று மாநிலங்களவை தேர்தல் முடிவில், பாஜகவுக்கு கூடுதல் சீட்டுகள் கிடைத்து இருக்கின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 29 சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களில் 17 பேர் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்து கூடுதல் இடங்களை கிடைக்க செய்து இருக்கின்றனர். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை கடந்து அனில் போண்டே மற்றும் தனஞ்ஜெய் மஹாதிக் ஆகியோர் மகாராஷ்டிராவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகியுள்ளனர்.

சங்கடங்களை சந்தித்த பாஜக

சங்கடங்களை சந்தித்த பாஜக

அதேபோல் கர்நாடகாவில் 3 இடங்களையும், அரியானாவில் கூடுதலாக ஒரு இடத்தையும் சொல்லி அடித்திருக்கிறது பாஜக. ராஜஸ்தானில் ஒரு வேட்பாளரை தேர்வு செய்வதற்கு போதுமான வாக்குகள் இருந்தன. ஆனால், அக்கட்சியை சேர்ந்த சுபாஷ் சந்திரா மற்றும் கார்திகேய ஷர்மா ஆகியோர் சுயேட்சைகளாக வேட்புமனுவை தாக்கல் செய்தார்கள். இதில் கார்த்திகேய ஷர்மா வெற்றிபெற சுபாஷ் சந்திரா தோல்வியை தழுவினார். ஒரு பக்கம் கெத்து காட்டினாலும், ராஜஸ்தானில் பாஜகவுக்கு சில மோசமான அனுபவங்களையும் இந்த தேர்தல் கொடுத்து இருக்கிறது.

ராஜஸ்தான் பாஜகவுக்குள் பூசல்

ராஜஸ்தான் பாஜகவுக்குள் பூசல்

அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. சோபாரனி குஷ்வஹா வேறு கட்சி வேட்பாளருக்கு வாக்களித்ததற்காக கட்சி மேலிடம் விளக்கம் கேட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. ராஜஸ்தான் மாநில பாஜகவில் உள்ள பிளவுகளால் இது ஏற்பட்டதாகவும், வேறு கட்சி வேட்பாளருக்கு மாற்றி வாக்களித்ததற்கு முன்னாள் முதலமைச்சர் வசுந்திரா ராஜேதான் காரணம் என்று அக்கட்சியின் முன்னோடிகள் குற்றம்சாட்டுகின்றனர். ராஜஸ்தானில் ஒருவர் வெற்றிபெற 41 வாக்குகள் தேவை. அங்கு காங்கிரஸால் 2 இடங்களிலும் பாஜகவால் ஒரு இடத்திலும் வெல்ல முடியும். 30 வாக்குகள் பாஜகவுக்கு கூடுதலாக இருந்த நிலையில் அக்கட்சியால் 4 வது வேட்பாளருக்காக மேலும் 11 வாக்குகளை பெற முடியவில்லை என்பது மிகப்பெரிய குறைபாடாக பார்க்கப்படுகிறது.

 கர்நாடகாவில் வென்றது எப்படி

கர்நாடகாவில் வென்றது எப்படி

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையேயான பிரச்சனை பாஜகவுக்கு வாய்ப்பு அமைந்தது. 121 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட பாஜகவால் 2 இடங்களையும் காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தையும் வெல்ல முடியும். 4 வது இடத்துக்கு போட்டி அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மாநிலங்களவையில் தற்போது பாஜகவுக்கு சுயேட்சைகள் ஆதரவுடன் 95 உறுப்பினர்கள் உள்ளனர். கடந்த ஜூன் 3 ஆம் தேதி பாஜகவுக்கு 14 உறுப்பினர்கள் கிடைத்து இருக்கின்றனர். மாநிலங்களவையில் 24 பாஜக உறுப்பினர்கள் உட்பட 57 இடங்கள் காலியானது. இதில் சுயேட்சைகள் உட்பட 23 பேரை பாஜக மீண்டும் பெற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+