நன்றி மக்களே நன்றி... இது இந்தியாவுக்கு கிடைத்த வெற்றி.. நாட்டு மக்களுக்கு அமித் ஷா நன்றி!
டெல்லி: நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றி பெறவுள்ள நிலையில் நாட்டு மக்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற லோக் சபா தேர்தலில் பாஜக எதிர்பார்த்ததைக் காட்டிலும் பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ளது. 340க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக மீண்டும் அரியாசனம் ஏறுவது உறுதியாகிவிட்டது. பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் 3 லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மகத்தான வெற்றியை கொடுத்த நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில், இந்த வெற்றி நாட்டுக்கே கிடைத்த வெற்றி. நாட்டின் இளைஞர்கள் ஏழை விவசாயிகளின் நம்பிக்கையின் வெற்றியாகும்.
यह जीत पूरे भारत की जीत है।
— Chowkidar Amit Shah (@AmitShah) May 23, 2019
देश के युवा, गरीब, किसान की आशाओं की जीत है।
यह भव्य विजय प्रधानमंत्री मोदी जी की पाँच साल के विकास और मजबूत नेतृत्व में जनता के विश्वास की जीत है।
मैं भाजपा के करोड़ों कार्यकर्ताओं की ओर से श्री @narendramodi जी को हार्दिक बधाई देता हूँ। pic.twitter.com/nAO3kBEqZU
இந்த பெரும் வெற்றி பிரதமர் மோடியின் ஐந்து ஆண்டு வளர்ச்சி மற்றும் வலுவான தலைமையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி. பிரதமர் மோடிக்கு கோடிக்கணக்கான பாஜக தொண்டர்களின் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.
फिर एक बार मोदी सरकार
— Chowkidar Amit Shah (@AmitShah) May 23, 2019
Thank You India. pic.twitter.com/kZC6YoXfdt
நன்றி இந்தியா என்றும் நாட்டு மக்களுக்கு அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications