காஷ்மீர் என்கவுண்ட்டரில் பலியானது இந்து தலைவர்கள் படுகொலை வழக்கில் தேடப்பட்ட பயங்கரவாதி!
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடான மோதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக தலைவர்கள் படுகொலை வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி ஒசாமா என தெரியவந்தது.
ஜம்மு காஷ்மீரின் ராம்பான் மாவட்டம் படோட் பகுதியில் வீடு ஒன்றுக்குள் 3 பயங்கரவாதிகள் புகுந்து தப்பிக்க முயற்சித்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் பாஜக தொண்டர்.

அவரை பயங்கரவாதிகள் பிணைக் கைதியாக பிடித்து வைத்துக் கொண்டு பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இருதரப்புக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை பல மணிநேரம் நீடித்தது.
இறுதியில் பயங்கரவாதிகளான ஒசாமா, ஹரூன் மற்றும் ஜாஹீத் ஆகியோர் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இதில் ராணுவ வீரர் ராஜேந்திரர் சிங் வீரமரணம் அடைந்தார்.
சுட்டு வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவரான ஒசாமாதான் பாஜக, ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் படுகொலை வழக்கில் தேடப்பட்ட நபராவார். 2018-ம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் அனில் பாரிஹர், அவரது சகோதரர் அஜித் பாரிஹர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி சந்திரகேந்த் சர்மா மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த 4 படுகொலை வழக்குகளிலும் ஒசாமாதான் குற்றவாளி என்பதால் போலீசார் தேடி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications