Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

180 டிகிரி யூடர்ன் போட்ட பாஜக.. தன்கர் டூ சி.பி. ராதாகிருஷ்ணன்! தமிழ்நாடு தேர்தலை தாண்டி பல காரணம் இருக்காம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜெகதீப் தன்கர் குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நிலையில், இதற்காகவே ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அதையும் தாண்டிப் பல விஷயங்கள் ராதாகிருஷ்ணனுக்கு சாதகமாக இருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

ஜெகதீப் தன்கர் துணை குடியரசுத் தலைவராக இருந்த வரை அவர் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தன. குடியரசு துணைத் தலைவர் நடுநிலையுடன் இருக்க வேண்டியவர்.. ஆனால், ஜெகதீப் தன்கர் வெளிப்படையாகவே ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தன. இந்தச் சூழலில் தான் குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக வேட்பாளராக முன்மொழிந்துள்ளது.

BJP s 180-Degree Turn From Jagdeep Dhankhar to CP Radhakrishnan as NDA Vice-Presidential Pick

ஜெகதீப் தன்கர்

ஜாட் சமூகத்தைச் சேர்ந்த ஜகதீப் தன்கரை பாஜகவில் சேரும் முன்பு பல கட்சிகளில் இருந்தவர். இதனால் பாஜகவிலேயே சில சமயம் அவர் மீது அதிருப்திகள் எழுந்தன. ஆனால், சி.பி. ராதாகிருஷ்ணன் அதற்கு நேர் எதிரானவர். தென்னிந்தியாவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர். ஜெகதீப் தன்கர் அதிரடி அரசியலுக்குப் பெயர் போனவராக இருந்த நிலையில், அதற்கு மாறாக ராதாகிருஷ்ணன் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறை கொண்டவராகக் கருதப்படுகிறார்.

2022ல் விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் பெரும்பாலும் ஜாட் சமூகத்தினரே இருந்தனர். மோடி அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்திற்கு நடுவே தான் அதே சமூகத்தைச் சேர்ந்த ஜகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டார். ஜாட் விவசாயிகள் தேசிய அதிகார அமைப்பின் ஒரு பகுதி என்பதையும், எப்போதும் அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பதவி நியமனம் இருந்தது.

சி.பி. ராதாகிருஷ்ணன்

மறுபுறம் சி.பி. ராதாகிருஷ்ணனின் தேர்வு, ஓபிசிகளின் நம்பிக்கையைப் பெற இருக்கிறது. மேலும் தென்னிந்தியாவில் கர்நாடகாவைத் தவிர மற்ற மாநிலங்களில் கால்பதிக்க முடியாமல் திணறுகிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாஜக தீவிரமாக முயன்றும் கட்சியை வலுப்படுத்த முடியவில்லை. அடுத்தாண்டு தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தலும் நடக்கும் சூழலில், அதைக் கருத்தில் கொண்டே ராதாகிருஷ்ணனை பாஜக தரப்பு வேட்பாளராகத் தேர்வு செய்துள்ளது.

மத்திய அரசை திமுக தரப்பு மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருவதாகவும் நிதி கொடுக்கக்கூட மறுப்பதாகவும் திமுக தரப்பு தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. அதற்கு செக் வைக்கும் வகையில் ராதாகிருஷ்ணனை பாஜக தேர்வு செய்துள்ளது.

அனுபவம் வாய்ந்தவர்

மகாராஷ்டிராவில் சர்ச்சைக்குரிய பொதுப் பாதுகாப்பு மசோதாவை அங்குள்ள பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றி அனுப்பியது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் மனு அளித்திருந்தன. வழக்கமாக ஆளும் தரப்பு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் தருவார்கள். ஆனால், ராதாகிருஷ்ணன் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமலேயே இருக்கிறார். இது அவரது அனுபவத்தையே காட்டுகிறது.

ஜகதீப் தன்கர் அடிப்படையில் ஒரு வழக்கறிஞர்.. அவர் அரசியலில் இருந்தபோதும் மோதல் போக்கிற்கு பெயர் பெற்றவர். மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகும் அது தொடர்ந்தது. மம்தா பானர்ஜி அரசுடன் அவர் அடிக்கடி மோதல் போக்கையே கொண்டிருந்தார். அதன் பிறகே அவர் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அதிரடி vs அரவணைத்துச் செல்வது

நமது நாட்டில் குடியரசு துணைத் தலைவர் தான் நாடாளுமன்றத்தையும் வழிநடத்துவார். கடந்த முறை ராஜ்யசபாவுக்கு ஆக்ரோஷமான தலைவர் வேண்டும் என பாஜக கருதியது. இதுவும் தன்கரை தேர்வு செய்ய அப்போது முக்கிய காரணமாக இருந்தது. எதிர்பார்த்தது போலவே ராஜ்யசபாவிலும் அவர் அதிரடியாகவே நடந்து கொண்டார். தன்கர் ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகளும் குற்றஞ்சாட்டின. ஆனால் ராஜ்யசபாவுக்கு இந்த முறை சமநிலை தேவைப்படுவதாகவே பாஜக கருதுகிறது. இதுவும் அனுபவம் வாய்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் தேர்வுக்குக் காரணமாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தைச் சுமுகமாக நடத்தவும், நிலைமைகளைச் சீராக்கும் ஒரு அனுபவம் கொண்ட பொறுமையான ஆளுமை தேவைப்படுகிறது. அதற்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் ஏற்ற ஒரு தலைவராகக் கருதப்படுகிறார். இதன் காரணமாகவே முந்தைய குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரில் இருந்து 180 டிகிரி யூடர்ன் போட்டு இந்த முறை பாஜக வேட்பாளரைத் தேர்வு செய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+