டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எக்சிட் போல் எக்ஸாக்ட் போல் இல்லை.. 5 மணிக்கு மேல்தான் எங்களுக்கு ஓட்டு விழுந்தது.. பாஜக "ஹோப்"

Google Oneindia Tamil News

Recommended Video

    Delhi exit Poll results | டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மி ஆட்சி... கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியீடு - வீடியோ

    டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மியே வெற்றி பெறும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுவது முற்றிலும் தவறு என பாஜக மூத்த தலைவர் மீனாட்சி லேகி தெரிவித்தார்.

    தலைநகர் டெல்லிக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் அதை கைப்பற்றுவதில் மும்முனை போட்டி நிலவியது. அதாவது ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே அந்த போட்டி நடந்தது.

    இந்த நிலையில் நேற்று தேர்தல் நடந்து முடிந்தது. இதன் எக்சிட் போல் கருத்து கணிப்புகளும் வெளியாகின.

    விளக்கம்

    விளக்கம்

    இதில் இந்தியா டுடே, இந்தியா நியூஸ், நியூஸ் எக்ஸ் நேத்தா, டைம்ஸ் நவ், ரிபப்ளிக் உள்ளிட்ட செய்தி நிறுவனங்கள் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியே ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என தெரிவித்துள்ளன. மேலும் ஆம் ஆத்மி கட்சியை மக்கள் தேர்வு செய்தது ஏன் என்பதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

    ஆலோசனை

    ஆலோசனை

    இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் பயங்கர குஷியில் உள்ளனர். மேலும் பாஜக மற்றும் காங்கிரஸ் காதுகளில் புகைச்சல் ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது. எனினும் நேற்றைய தினம் பாஜகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் டெல்லியில் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.

    மீனாட்சி லேகி

    மீனாட்சி லேகி

    இந்த ஆலோசனைக்கு பிறகு மூத்த தலைவர் மீனாட்சி லேகி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் அமித்ஷாவுடனான ஆலோசனை கூட்டத்தில் எக்சிட் போல் குறித்து ஆலோசனை செய்தோம். எக்சிட் போல்கள் என்பது எக்ஸாக்ட் போல்கள் கிடையாது. தேர்தல் நேரத்தில் எங்கள் வாக்காளர்கள் தாமதமாக வந்து மாலை வரை வாக்களித்தனர்.

    குடும்பத்துடன் வாரீர்

    குடும்பத்துடன் வாரீர்

    ஆனால் இந்த எக்சிட் போல்கள் மூலம் பெறப்பட்ட தகவல்கள் மாலை 4 அல்லது 5 மணி நிலவரத்தை வைத்தே ஆகும். முன்பு போல் எக்சிட் போல்கள் தவறு என்பது வரும் 11-ஆம் தேதி நிரூபணமாகும் என்றார். தாமதமாக வந்து தேர்தலில் வாக்களிப்பது என்பது பாஜகவின் யுத்தி அல்ல. புதன்கிழமை நடந்த பொதுக் கூட்டத்திலும் அங்கிருந்த வாக்காளர்களிடம், 8-ஆம் தேதி காலை 10.30 மணிக்குள் குடும்பத்தினருடன் வந்து வாக்களியுங்கள்.

    முணுமுணுப்பு

    முணுமுணுப்பு

    இதன் மூலம் டெல்லியையும் நாட்டையும் பாதுகாக்க உதவுங்கள் என அமித்ஷா கோரிக்கை விடுத்திருந்தார். மேலும் அவர் உங்கள் முடிவுகள் என்னவென எனக்கு தெரியும். பிப் 11-ஆம் தேதி கிடைக்கும் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் அதிர்ச்சியை அளிக்கும் என அமித்ஷா தெரிவித்திருந்தார். எக்சிட் போல்களை பார்க்கும் போது தேர்தல் முடிவுகளால் அமித்ஷாவுக்கே அதிர்ச்சி ஏற்படும் என ஆம் ஆத்மி கட்சியினர் முணுமுணுக்கின்றனர்.

    English summary
    BJP says that Exit polls are not an exact polls. We gets vote after 5 pm. They said after meeting with Amit shah.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X