ராகுல் ரகசியப் பயணம் மேற்கொள்வது ஏன்... பாஜக விமர்சனம்
டெல்லி: ராகுல்காந்தி எப்போதும் ரகசியப் பயணம் மேற்கொள்வது ஏன் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் இவ்வாறு செய்வது ஏற்கத்தக்கதல்ல என்றும் பாஜக தெரிவித்துள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்ம ராவ் இது தொடர்பாக இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த போது, ராகுலின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக விமர்சித்தார்.
ராகுல் தனது தொகுதிக்கு சென்றதை விட வெளிநாடுகளுக்கு சென்றது தான் அதிக முறை என அவர் விமர்சித்துள்ளார்.

விமர்சனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென வெளிநாடு புறப்பட்டு சென்றுள்ளார். அவர் எந்த நாட்டுக்கு சென்றுள்ளார் என்ற விவரத்தை வெளியிடாமல் ரகசியமாக சென்றது தேசிய அளவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக கருத்து
மெடிடேஷனல் பயணமாக ராகுல் இந்தோனேஷியா சென்றிறுக்கக் கூடும் என காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ள நிலையில், பாஜக அதனை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் திடீர் திடீரென்று 16 முறை ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றுள்ளதாகவும், அதில் 9 முறை எந்தெந்த நாடுகளுக்கு ராகுல் பயணித்தார் என்ற விவரத்தை கூட தெரிவிக்காமல் ரகசியம் காக்கப்படுவதாக பாஜக கூறியுள்ளது.

தோற்கடிப்பு
உத்திரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட காரணமே அவர் தொகுதியை கண்டுகொள்ளாமல் இருந்ததே என பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார். ராகுலின் செயல்பாடுகள் பிடிக்காததன் காரணமாகவே அமேதி மக்கள் அவரை தோற்கடித்ததாக தெரிவித்துள்ளார்.

சாடல்
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தனது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்த தகவலை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ள நிலையில், அதனை ராகுல் பின்பற்றுவதே கிடையாது என பாஜக சாடியுள்ளது.
-
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications