Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛72 தொகுதி’’.. பாஜகவின் 2வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. கட்கரி, அனுராக் தாகூருக்கு வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பாஜகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மொத்தம் 72 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு மீண்டும் நாக்பூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

லோக்சபா தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. வரும் 20ம் தேதிக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜக, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. பாஜக சார்பில் கடந்த 2ம் தேதி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

BJP s 2nd phase candidate list likely to be released today which is included Nitin Gadkari Maneka Gandhi and Varun Gandhi

மொத்தம் 195 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இதில் பிரதமர் மோடி மீண்டும் உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடுகிறார். அதேபோல் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியிலும், ராஜ்நாத் சிங் உத்தர பிரதேச மாநிலம் லக்னோ தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தான் இன்று பாஜகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் நாடாளுமன்ற தேர்தல் குழு 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடுவது பற்றி விரிவாக விவாதித்துள்ள நிலையில் இன்று பட்டியல் வெளியானது. இந்த பட்டியலில் பாஜகவின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அதாவது 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் பாஜக மொத்தம் 72 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் பட்டியலில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரியின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கடந்த 2014, 2019 ஆகிய தேர்தல்களில் நிதின் கட்காரி வென்ற நிலையில் 3வது முறையாக பாஜக அவரை அங்கு களமிறக்கப்பட்டுள்ளார்.

அதேபோல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மும்பை வடக்கு தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு கார்னால் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தற்போது அவர் அந்த தொகுதியின் சிட்டிங் எம்பியாக உள்ள நிலையில் மீண்டும் களமிறங்கி உள்ளார்.

மேலும் கர்நாடகாவை பொறுத்தமட்டில் 20 தொகுதிகளுக்கு வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை ஹாவேரி தொகுதியில் போட்டியிடுகிறார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் ராகவேந்திராவுக்கு மீண்டும் சிவமொக்கா தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மைசூர் - குடகு தொகுதியில் மைசூர் மன்னர் வாரிசு யதுவீர் கிருஷ்ணதத்தா சாமராஜ உடையாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் லோக்சபாவில் ஸ்பிரே தாக்குதல் நடத்தியோருக்கு பாஸ் வழங்கிய பிரதாப் சிம்ஹா மைசூர் - குடகு தொகுதியில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

பெங்களூர் தெற்கு தொகுதியில் மீண்டும் தேஜஸ்வி சூர்யா போட்டியிடுகிறார். பெங்களூர் மத்திய தொகுதியில் மீண்டும் பிசி மோகன் களமிறக்கப்பட்டுள்ளார். பெங்களூர் வடக்கு தொகுதியில் சோபா கரந்தலாஜி போட்டியிடுகிறார். இவர் தற்போது உடுப்பி - சிக்கமகளூர் தொகுதி எம்பியாக உள்ள நிலையில் தொகுதி மாறி களமிறங்கி உள்ளார்.

2ம் கட்ட பட்டிலை பொறுத்தமட்டில் டையூ டாமன் வேட்பாளராக காலபென் டெல்கார் போட்டியிடுகிறார். இதுதவிர டெல்லியின் 2 தொகுதி, குஜராத்தின் 7 தொகுதி, ஹரியானாவின் 6 தொகுதி, இமாச்சல பிரதேசத்தின் 2 தொகுதி, கர்நாடகாவின் 20 தொகுதி, மத்திய பிரதேசத்தின் 5 தொகுதி, மகாராஷ்டிராவின் 20 தொகுதி, தெலுங்கானாவின் 5 தொகுதி, திரிபுராவில் ஒரு தொகுதி, உத்தரகாண்ட்டில் 2 தொகுதி என மொத்தம் 72 வேட்பாளர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது.

முன்னதாக ராகுல் காந்தியின் சித்தியான மேனகா காந்தியின் (மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் உடன் பிறந்த தம்பியான சஞ்சய் காந்தியின் மனைவி) பெயரும் இந்த பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பெயர் இடம்பெறவில்லை. முன்னாள் மத்திய அமைச்சரான மேனகா காந்தி தற்போது உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பியாக உள்ளார். அவருக்கு மீண்டும் அங்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில் 2வது பட்டியலில் உத்தர பிரதேச மாநில தொகுதிகளின் வேட்பாளர் பெயர்கள் எதுவும் இடம்பெற்றவில்.

மேலும் ராகுல் காந்தியின் தம்பியும், மேனகா காந்தியின் மகனுமான வருண் காந்தியின் பெயரும் பாஜகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலில் இடம்பெறலாம் என சொல்லப்பட்டது. இவர் தற்போது உத்தர பிரதேச மாநிலம் பிலிபிட் தொகுதி எம்பியாக உள்ளார். சமீபத்தில் அவர் பாஜகவின் கொள்கைகளை விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பினார். ஆனாலும் கூட வருண் காந்திக்கு மீண்டும் பிலிபிட் தொகுதியில் பாஜக வாய்ப்பு வழங்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் 2வது பட்டியலில் அவரது தொகுதியும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+