தென்னிந்தியாவில் 40- 50 சீட்- அதிமுக தந்த அடியை மீறி 'மிஷன் சவுத்' ஜெயிக்கனும்-பாஜக சீரியஸ் ஸ்கெட்ச்
டெல்லி: லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவின் 131 தொகுதிகளில் குறைந்தது 40 முதல் 50 தொகுதிகளை கைப்பற்றினால்தான் மிஷன் சவுத்-க்கு வெற்றி என்கிற முனைப்பில் பாஜக மேலிடம் படுதீவிரமாக காய்களை நகர்த்தி வருவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தெலுங்கானாவில் மொத்தம் 131 தொகுதிகள் உள்ளன.

தமிழ்நாடு : 39 கேரளா: 20 கர்நாடகா: 28 தெலுங்கானா: 17 ஆந்திரா : 25, லட்சத்தீவு-1; புதுச்சேரி- 1 என மொத்தம் 131 லோக்சபா தொகுதிகள் உள்ளன.
2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 131 தொகுதிகளில் 39 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 24, இடதுசாரிகள் 8 இடங்களிலும் இதர கட்சிகள் 60 இடங்களிலும் வென்றன.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 131 தொகுதிகளில் பாஜக 30 இடங்களில்தான் வென்றது. காங்கிரஸுக்கு 28 இடங்கள் கிடைத்தன. பாஜகவுக்கு 25 தொகுதிகள், கர்நாடகாவில் மட்டுமே கிடைத்தது. காங்கிரஸுக்கு கேரளாவில் மட்டும் 15 தொகுதிகள் கிடைத்தன.
2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தென்னிந்திய மாநில தேர்தல் முடிவுகள்:
கேரளா (மொத்தம் 20 தொகுதிகள்)
காங்கிரஸ் 15
முஸ்லிம் லீக்- 2
கேரளா காங்கிரஸ்(எம்) 1
சிபிஎம்- 1
ஆர்.எஸ்.பி- 1
தமிழ்நாடு (மொத்தம் 39 தொகுதிகள்)
திமுக - 20
காங்கிரஸ்- 8
சிபிஐ- 2
சிபிஎம்- 2
விசிக- 2
முஸ்லிம் லீக்- 1
கொமதேக- 1
மதிமுக -1
இ.ஜனநாயக கட்சி-1
புதுச்சேரி- 1
காங்கிரஸ்- 1
லட்சத்தீவு- 1
தேசியவாத காங்கிரஸ்- 1
ஆந்திரா (மொத்தம் 25 தொகுதிகள்)
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் -22
தெலுங்கு தேசம்- 3
கர்நாடகா (மொத்தம் 28 தொகுதிகள்)
பாஜக- 25
காங்கிரஸ்- 1
மதச்சார்பற்ற ஜனதா தளம்-1
பாஜக ஆதரவு சுயேட்சை- 1
தெலுங்கானா ( மொத்தம் 17 தொகுதிகள்)
பிஆர்எஸ்- 9
பாஜக -4
காங்கிரஸ்- 3
ஓவைசி கட்சி -1
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தென்னிந்தியாவின் 131 தொகுதிகளில் பாஜகவுக்கு அதிகபட்சமாக இதே அளவு 30 தொகுதிகள்தான் கிடைக்கும்; குறிப்பாக வழக்கம் போல கர்நாடகாவில்தான் அதிக தொகுதிகள் கிடைக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவித்து வருகின்றன.
ஆனால் பாஜக டெல்லி மேலிடமோ தென்னிந்தியாவில் இந்த முறை மொத்தம் 40 முதல் 50 தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என மிஷன் சவுத்தில் தீவிரமாக இருக்கிறது. இத்தனைக்கும் தமிழ்நாட்டில் அதிமுகவும் கூட்டணியில் இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்த காலத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை. தற்போது அதிமுக கூட்டணியில் இல்லாத நிலையில் ஒரு சில தொகுதிகளிலாவது வென்று காட்டுவது அதி முக்கியமானடு என மிஷன் சவுத் நிர்வாகிகள் தமிழ்நாடு பாஜகவுக்கு கட்டளை பிறப்பித்துள்ளனராம்.
மிஷன் சவுத்தில் 40 முதல் 50 இடங்களைக் கைப்பற்ற லோக்சபா தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக அடுத்தடுத்து பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் இடைவிடாமல் தென்னிந்திய மாநிலங்களுக்கு படையெடுக்க உள்ளனராம். இதன் முதல் கட்டமாகத்தான் தமிழ்நாட்டின் திருச்சியில் ரூ20,000 கோடி திட்டங்களை பிரதமர் மோடி நேரில் வந்து தொடங்கி வைத்தார் என்கின்றன பாஜக வட்டாரங்கள். ஆக இனி பாஜகவின் டார்கெட் தென்னிந்தியாதான்!












Click it and Unblock the Notifications