கார் விபத்தில் உயிர்தப்பிய ஷாருக் பட நாயகி! காஸ்ட்லி கார்கள் மோதலால் இருவர் பலி.. பகீர் வீடியோ
டெல்லி: பிரபல பாலிவுட் நடிகை தனது கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சம்பவம் ரசிகர்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.
ஷாருக்கானுடன் பாலிவுட்டில் ஸ்வதேஷ் என்ற படத்தில் நடித்தவர் நடிகை காயத்ரி ஜோஷி. இவர் தனது கணவர் விகாஷ் ஓப்ராயுடன் இத்தாலியில் வசித்து வருகிறார்.

இத்தாலியில் நடந்த ஒரு சூப்பர் கார் டூரில் இருவரும் பயணம் மேற்கொண்டனர். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து நடந்தது. சம்பவ இடத்தில் பல கார்கள் மோதிக் கொண்டன.
ஃபெர்ராரி காரில் பயணித்த ஒரு தம்பதி அங்கு சென்ற லம்போர்கினி காரை வேகமாக முந்த முயற்சித்தனர். அப்போது அருகில் பயணித்த வேனில் அவர்களுடைய கார் மோதி இந்த விபத்து நடந்தது. அந்த பெர்ராரி கார் தீப்பிடித்து அதில் பயணம் மேற்கொண்ட தம்பதி இறந்துவிட்டனர்.

அவர்கள் மார்க்கஸ் க்ராடலி, மெலிஸா க்ராடலி என தெரியவந்துள்ளது. இருவருக்கும் வயது முறையே 67, 63 ஆகும். இந்த விபத்தில் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த நடிகை காயத்ரி ஜோஷி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருக்கு சிறு காயங்களே ஏற்பட்டன.
இந்த விபத்து குறித்து நடிகை காயத்ரி கூறுகையில் கடவுளின் அருளால் தானும் தனது கணவர் ஓபராயும் பிழைத்துக் கொண்டதாகவும் தற்போது நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்து நடந்த இடம் சர்டியானாவின் கிராமப்புற சாலையாகும். உயிரிழந்த தம்பதி ஸ்விட்சர்லாந்தை சேர்ந்தவர்கள். சூப்பர் கார் டூர் நிகழ்வில் இந்த விபத்து நடந்தது. சூப்பர் கார் டூர் என்றால் டியூலடாவிலிருந்து ஆல்பியா வரை விலைமதிப்புள்ள கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியாகும். காயத்ரி ஜோஷி ஸ்வதேஷ் படத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டார்.
2005 ஆம் ஆண்டு தொழிலதிபரான விகாஸ் ஓபராயை திருமணம் செய்து கொண்டு இத்தாலியில் காயத்ரி செட்டிலாகிவிட்டார். ஆனால் இவர் திருமணத்திற்கு பிறகும் லைம்லைட்டில் இருந்து வருகிறார்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications