டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உங்கள் ஓட்டுச்சாவடி… ஓட்டுச்சாவடி எண்னை மொபைலில் அறிய வேண்டுமா… இதோ 2 வழிகள்

Google Oneindia Tamil News

டெல்லி : உங்களின் ஓட்டு எந்த ஓட்டுச்சாவடி எல்லைக்குள் வருகிறது, ஓட்டுச்சாவடி எண் ஆகியவற்றை இருந்த இடத்திலேயே அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, ஆன்லைன் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் என 2 வழிகளில் ஓட்டுச்சாவடியை தெரிந்து கொள்ளலாம்.

ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது நிலையில், இன்று 91 தொகுதிகளில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இது தவிர ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, வருகிற 18 ம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Booth Number can found Through Mobile; Election Commission Announced

இந்த நிலையில், மொபைல் மூலம், ஆன்லைனில் ஓட்டுச்சாவடியை கண்டறிய தேர்தல் ஆணையம் விவரங்களை அளித்துள்ளது. அதன்படி, 1. தேசிய வாக்காளர் சேவை மையத்தின் ( National Voters' Services Portal (NVSP) அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். 2. குடிமக்கள் தகவல் (Citizen Information) என்ற வசதியை கிளிக் செய்து, உள்ளே செல்லவும். 3. உங்களின் பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர் மற்றும் மாநிலத்தை பதிவிட வேண்டும். 4.அதில் தோன்றும் கேப்சா கோடினை பதிவிட வேண்டும். 5.உங்களின் ஓட்டுச்சாவடி எண் மற்றும் பல விபரங்கள் உங்கள் திரையில் தோன்றும்.

மாட்டுக்கறி விற்ற முதியவருக்கு நேர்ந்த கொடுமை... மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் மாட்டுக்கறி விற்ற முதியவருக்கு நேர்ந்த கொடுமை... மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

எஸ்எம்எஸ்.மூலம் ஓட்டுச்சாவடியை கண்டறிய விவரங்கள் பின்வருமாறு: 1. உங்கள் மொபைல் போனில் EPIC என டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு, உங்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை எஸ்எம்எஸ்., ஆக டைப் செய்ய வேண்டும். 2. இந்த எஸ்எம்எஸ்.,ஐ 51969 அல்லது 166 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். 3. சில நிமிடங்களிலேயே உங்களின் மொபைல் போனிற்கு உங்கள் பெயர், ஓட்டுச்சாவடி எண், அது இருக்கும் இடம் உள்ளிட்ட விபரங்கள் எஸ்எம்எஸ்., ஆக அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்த தேர்தலில் யாருக்கு ஓட்டு போட்டோம் என்பதை வாக்காளர் தெரிந்து கொள்ளும் வகையில் மின்னணு வாக்கு பதிவு இயந்திரத்தில் விவிபெட் இயந்திரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இயந்திரத்தில், வேட்பாளர்களின் வரிசை எண், பெயர், சின்னம் மட்டும் தெரியும். இதற்காக தனி சாப்ட்வேரை தேர்தல் ஆணையம் உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Lok sabha Elections 2019: Election Commission Announced That Booth Number can found Through Mobile
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X