டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லை பிரச்சினைக்கு சீனாதான் காரணம்..குவாட் மாநாட்டில் பங்கேற்ற கையோடு குட்டு வைத்த ஜெய்சங்கர்!

Google Oneindia Tamil News

டெல்லி: ‛‛இந்தியா-சீனா இடையேயான ஒப்பந்தத்தை சீனா மீறி வருகிறது. இதனால்தான் எல்லையில் பதற்றம் நிலவுகிறது'' என குவாட் மாநாட்டில் பங்கேற்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் குவாட் கூட்டமைப்பின் மாநாடு நடந்தது. நாடுகளுக்கு இடையேயான எல்லை, நிலம் தொடர்பான பிரச்னை, அரசியல் உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

குவாட் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ஜப்பான் வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி, ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மாரீஸ் பெய்ன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தோ-பசிபிக் பிராந்தியம் அச்சுறுத்தலின்றி பாதுகாக்கப்பட வேண்டும்: குவாட் அமைப்பு உறுதி! சீனா கோபம்இந்தோ-பசிபிக் பிராந்தியம் அச்சுறுத்தலின்றி பாதுகாக்கப்பட வேண்டும்: குவாட் அமைப்பு உறுதி! சீனா கோபம்

 சீனா, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு

சீனா, பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு

இந்தோ - பசிபிக் கடல் பிராந்தியத்தை பிற நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்தும், அச்சுறுத்தலில் இருந்தும் பாதுகாக்க வேண்டும் என உறுதி எடுக்கப்பட்டது. அண்டை நாடுகளின் எல்லைகளில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் சீனா, பயங்கரவாதத்தை தூண்டும் பாகிஸ்தான், அணுஆயுதம், ஏவுகனை சோதனையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் வடகொரியா ஆகிய நாடுகளுக்கு நேரிடையாகவும், மறைமுகமாவும் எச்சரிக்கை விடப்பட்டது.

கோபத்தில் சீனா

கோபத்தில் சீனா

இந்த மாநாட்டில் பல்வேறு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார். இந்த மாநாட்டால் சீனா கோபம் அடைந்துள்ளது.‛‛சர்வதேச அளவில் சீனாவின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ‛குவாட்' அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நாடுகளுக்கு இடையே மோதலை தூண்டுவிடுவது தான் இதன் நோக்கம். குவாட் அமைப்பின் இந்த நோக்கம் தோல்வி அடையும்'' என சீனா அறிக்கை வெளியிட்டுள்ளது.

 சீனா அத்துமீறலால் பதற்றம்

சீனா அத்துமீறலால் பதற்றம்

மெல்போர்னில் இன்று ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் மாரீஸ் பெய்னுடன், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூட்டாக பேட்டியளித்தார். அப்போது ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா-சீனா எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ராணுவத்தை குவிக்ககூடாது எனும்
எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை சீனா அடிக்கடி மீறுகிறது. இதனால் தான் எல்லையில் பதற்றம் ஏற்படுகிறது. குவாட் மாநாட்டில் இந்தியா-சீனா இடையேயான உறவு பற்றி பேசினோம். பிற நாட்டினரும் தங்களது அண்டை நாடுகள் உடனான தொடர்பு பற்றி எடுத்து கூறினர்.

Recommended Video

    Brahmos Missile-க்கு Philippine, OK சொன்னது ஏன்? | Dare devil Bikers | Oneindia Tamil
    நம்பகத்தன்மை குறையாது

    நம்பகத்தன்மை குறையாது

    குறிப்பாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட பல நாடுகள் சட்டபூர்வமாக ஆர்வம் காட்டுகின்றன. சீனா விமர்சனம் செய்வதால் குவாட் கூட்டமைப்பின் மீதான நம்பகத்தன்மை குறைந்து போகாது. மேலும் எல்லையில் பெரிய நாடு ஒப்பந்தங்களை மீறும்போது அனைத்து நாடுகளுக்கான பிரச்னையாக அதை கருத வேண்டும்'' என்றார்.

    English summary
    Border tension row because of Disregard of written agreements by China, says indian union minister Jaishankar after the quad press conference in melbourne.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X