Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மசோதாக்களுக்கு ஒப்புதல் தர.. ஆளுநருக்கு காலக்கெடு விதிக்காதது ஏன்? ஓய்வுக்கு பிறகு மனம் திறந்த கவாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பது தொடர்பான வழக்கில் முன்பு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்த காலக்கெடுவைத் தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு நீக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஏன் இந்த தீர்ப்பை அளித்தோம் என்பது குறித்து கவாய் ஓய்வுக்குப் பிறகு விளக்கியுள்ளார்.

ஆளுநருக்குக் காலக்கெடு விதிப்பது தொடர்பான ஜனாதிபதி எழுப்பிய 14 கேள்வி குறிப்பு தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு கடந்த வாரம் தீர்ப்பளித்திருந்தது. அதில் மசோதாக்களில் முடிவெடுக்க முன்பு காலக்கெடு விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்திருந்த நிலையில், அந்த காலக்கெடு நீக்கப்பட்டது. அதேநேரம் ஆளுநர் ஒரு மசோதாவில் முடிவெடுக்கத் தாமதம் செய்தால் நீதிமன்றத்தை நாடலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

BR Gavai Defends SC Verdict Relaxed Timelines for Governors on Bills But No Indefinite Delays

மனம் திறந்த கவாய்

இந்த தீர்ப்பை வழங்கிய சில நாட்களிலேயே தலைமை நீதிபதி கவாய் ஓய்வு பெற்றார். அவரை தொடர்ந்து நீதிபதி சூரியகாந்த், நாட்டின் 53வது தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். இதற்கிடையே ஆளுநர் காலக்கெடு வழக்கு தொடர்பாக ஓய்வுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் மனம் திறந்துள்ளார். மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர் முடிவெடுப்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவர் விளக்கினார்.

நமது அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர் மற்றும் ஜனாதிபதிக்குக் காலக்கெடு விதிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்ட கவாய், இதனால் சுப்ரீம் கோர்ட் நடுநிலையான தீர்ப்பையே வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேநேரம் ஆளுநர்களால் எந்தவொரு மசோதாவையும் காலவரையின்றி நிறுத்திவைக்க முடியாது என்பதைத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதிகார சமநிலை

டெல்லியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கவாய் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். அவர் இது தொடர்பாக மேலும் பேசுகையில், "நாங்கள் காலக்கெடு விதிக்க முடியாது எனச் சொல்லி உள்ளோம். அதேநேரம் ஆளுநர் ஒரு மசோதாவை காலவரையின்றி நிலுவையில் வைக்க முடியாது என்று கூறி சமநிலையை ஏற்படுத்தியுள்ளோம்" என்றார்.

ஏன் காலக்கெடு விதிக்கவில்லை

ஏன் காலக்கெடுவை விதிக்கவில்லை என்ற கேள்விக்கு அவர், "அரசியலமைப்புச் சட்டத்தில் இதுபோல எந்தவொரு காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. எனவே, அரசியலமைப்பு சொல்லாத ஒரு காலக்கெடுவை நீதிமன்றத்தால் உருவாக்க முடியாது. அதேநேரம், மீண்டும் சொல்கிறேன், ஆளுநர்கள் காலவரையின்றி மசோதாக்களை நிறுத்திவைக்க முடியாது. மிகவும் தாமதம் ஏற்பட்டால், அப்போது நீதிமன்றம் அதில் தலையிடும்" என்றார்.

அதிகாரப் பிரிவினை கோட்பாட்டை வலியுறுத்தி அவர், ஒரு ஆளுநர் மசோதாவை காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்க முடியாது என்ற போதிலும் அரசியலமைப்பில் இல்லாத ஒரு காலக்கெடுவை நீதிமன்றம் விதிக்க முடியாது என்று தெரிவித்தார். அப்படி காலக்கெடுவை விதிப்பது ஆளுநர் அதிகாரத்தைப் பறிப்பதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

கவாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின்படி, மாநில அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது குடியரசு தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் அல்லது மசோதாவை சட்டசபைக்கே திருப்பி அனுப்பலாம். இதில் ஒரு முடிவை எடுக்கும்போது.. ஏன் அந்த முடிவை எடுத்தார் என்பது குறித்து ஆராய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை. அதேநேரம் மசோதா மீது முடிவெடுப்பதில் நீண்ட தாமதம் இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிடலாம் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+